herzindagi
food pudding    Copy

Healthy snacks:சுவையோடு, ஆரோக்கியத்தைத் தரும் புதினா கொழுக்கட்டை!

<p style="text-align: justify;">&nbsp;நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து போன்ற பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் புதினாவில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக உள்ளது.
Editorial
Updated:- 2023-12-01, 19:39 IST

தற்போது பருவமழையின் காரணமாக ஆங்காங்கே சாரல் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்துவருகிறது. இந்த குளிருக்கு இதமாக மாலை நேரங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ்களைச் சாப்பிட வேணடும் என்று நினைப்போம். பஜ்ஜி,போண்டா, வெங்காய பக்கோடா, முறுக்கு போன்ற எண்ணெய் பலகாரங்ளைச் சாப்பிடும் போது, சில நேரங்களில் நமக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படும். இனி இதுப்போன்ற கவலை வேண்டாம். உடலுக்கு ஆரோக்கியத்தோடு, சுவையும் உங்களுக்கும் கொடுக்கும் இந்த புதினா கொழுக்கட்டையை உங்களது வீடுகளில் ட்ரை பண்ணிப்பாருங்கள்.  இதோ அதற்கான ரெசிபி டிப்ஸ் இங்கே..

mint kozhukkattai ()

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்

தேங்காய் பால் - ஒன்றரை கப்

உப்பு - சுவைக்கு ஏற்ப

புதினா தழை - அரை கப்

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

இஞ்சி - சிறியது

பூண்டு - 3 பல்

பச்சை மிளகாய் - 1

புதினா கொழுக்கட்டை செய்முறை:

  • புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழை மற்றும் பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்த விழுதுடன் தேங்காய் பால் ஊற்றி நன்றாகக் கரைத்து விட்டு வடிகட்டிக்கொள்ளவும். 
  • பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். சிறிதளவு நுரை கட்டி வந்தவுடன் இதனுடன் அரிசி மாவை சேர்த்து நன்றாகக் கிளறவும். ( நீங்கள் எடுத்து வைத்துள்ள அரிசி மாவு நைஸாக இருக்க வேண்டும்).
  • இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் கிளற வேண்டும். 
  • கைப்பிடிக்கும் அளவிற்கு சூடு வந்தவுடன் இதைச் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிப்பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக வைத்தால் போதும். சுவையோடு ஆரோக்கியமான புதினா கொழுக்கட்டை ரெடி.

பொதுவாகவே நீராவியில் வேகவைக்கும் உணவுப் பதார்த்தங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.  இனி நீங்களும் உங்களது குழந்தைகளை ஆரோக்கியத்துடன் வளர்க்க வேண்டும் என்றால் இந்த ரெசிபி உங்களுக்கு உதவியாக இருக்கும். 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com