உடலில் இரத்த அளவு குறைவாக இருக்கிறதா? பேரீச்சம்பழம் சாப்பிடு என நம்முடைய அம்மாக்கள் சொல்வதை நிச்சயம் சிறு வயதில் இருந்தே கேள்விப்பட்டிருப்போம். ஒரு பழத்தைச் சாப்பிடுவதற்குள் முகத்தை அந்தளவிற்கு சுளித்துக் கொள்வோம். வலுவலுவென இருக்கும் இந்த பேரீச்சம்பழங்களைச் சாப்பிட குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் தினமும் ஒரு பேரீச்சம்பழத்தைச் சாப்பிடும் போது இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல வகைகளில் ஆற்றலைத் தருகிறது. அவை என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: தேன் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா? வல்லுநர்கள் கூறும் விளக்கம்
காலையில் தினமும் 2 பேரீச்சம்பழங்களைச் சாப்பிட்டு வரும் போது உடல் வலிமைப் பெறுகிறது. குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் குடற்புழுக்கள் நோய்த் தாக்கத்தையும் குறைக்கிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இதோடு மட்டுமின்றி உடலின் செயல்படும் முக்கிய உடல் உறுப்புகளான இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் பேரீச்சம்பழங்கள் உதவியாக உள்ளது. பல ஆய்வுகளின் படி, பேரீச்சம்பழங்களைத் தொடர்ச்சியாக சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான அத்துணை ஆற்றல்களையும் மேம்படுத்த முடியும்.
இளம் வயதிலேயே குழந்தைகள் இரத்த சோகை நோய் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால் எந்த உறுப்புகளும் சீராக இயங்காது.நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவதோடு இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியையும் கட்டுப்படுத்துகிறது. இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், காலை எழுந்தவுடன் தினமும் 2 பேரீச்சம்பழங்களைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இரத்த சோகை பாதிப்பைத் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் அவர்கள் சாப்பிடவில்லையென்றாலும் எப்படியாவது பேரீச்சம்பழங்களைக் கொடுக்க வேண்டும்.
இதோடு மட்டுமின்றி பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதயம் சம்பந்தப்பட்ட நோய் தாக்கத்தையும் குறைக்க உதவுகிறது.
இந்த கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் இதை பகிரவும். இதுபோன்ற உடல் நலம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளைப் படிக்க https://www.herzindagi.com/tamil வுடன் இணைந்திருங்கள்.
Image credit - pexels
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com