herzindagi
image

ரோட்டுக்கடை காளான் : வீட்டிலேயே செய்து ருசித்திட இதுவே செய்முறை

மாலை நேரத்தில் டீ, காஃபி குடிக்கிறோமோ இல்லையோ எல்லோரும் 30 ரூபாய்க்கு ரோட்டுக்கடை காளான் வாங்கி ருசிக்கிறோம். ரோட்டுக்கடை காளான் ஏறக்குறைய மஞ்சுரியன் செய்முறையுடன் ஒத்துப்போகும். வாருங்கள் வீட்டிலேயே ரோட்டுக்கடை காளான் செய்வோம்.
Editorial
Updated:- 2025-07-02, 17:45 IST

முன்பெல்லாம் மாலை நேரத்தில் டீ குடித்த பிறகு பஜ்ஜி, போண்டா சாப்பிடும் பழக்கம் மக்களுக்கு இருந்தது. இப்போது ரோட்டுக்கடை காளான் வாங்கி ருசிக்கின்றனர். ரோட்டுக்கடை காளான் வடநாட்டு உணவல்ல. 20 வருடங்களுக்கு முன்பாகவே கோவை பகுதியில் கிடைக்க கூடிய ஃபாஸ்ட் புட் ஆக இருந்தது. பெயர் தான் காளான். ஆனால் உள்ளே பெரும்பாலும் முட்டைகோஸ் மட்டுமே இருக்கும். உண்மையான ரோட்டுக்கடை காளான் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்ப்போம். இரண்டு வகையான சாஸ் இருந்தால் காளானை வீட்டிலேயே செய்யலாம்.

kalan recipe

ரோட்டுக்கடை காளான் செய்ய தேவையானவை

  • காளான்
  • முட்டைகோஸ்
  • மைதா
  • சோள மாவு
  • மிளகாய் தூள்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • கரம் மசாலா
  • மஞ்சள் தூள்
  • கடலெண்ணெய் 
  • கறிவேப்பிலை
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி சாஸ்
  • பச்சை மிளகாய் சாஸ்

ரோட்டுக் கடை காளான் செய்முறை 

  • 250 கிராம் முட்டைகோஸ், 250 கிராம் காளான் எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். 
  • பாத்திரத்தில் இவற்றை போட்டு ஆறு ஸ்பூன் மைதா, இரண்டு ஸ்பூன் சோள மாவு, மூன்று ஸ்பூன் இஞ்சி - பூண்டு பேஸ்ட், அரை டீஸ்பூன் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், போட்டு கலந்து பக்கோடா மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றாமல் பிசையவும். 
  • அடுத்ததாக கடாயில் கடலெண்ணெய் ஊற்றி உதிரி பக்கோடா போட்டு பொரிப்பது போல் காளான் - முட்டைகோஸ் கலவையை பொரித்து எடுக்கவும்.
  • இதன் பிறகு கிரேவி தயாரிக்க வேண்டும். கடாயில் நான்கு ஸ்பூன் கடலெண்ணெய், பொடிதாக நறுக்கிய கொத்து கறிவேப்பிலை மற்றும் இரண்டு பெரிய வெங்காயம் போட்டு வறுக்கவும். 
  • வெங்காயம் நிறம் மாறியதும் இரண்டு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ஆறு ஸ்பூன் தக்காளி சாஸ், ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய் சாஸ், கொஞ்சம் உப்பு, அரை ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும். 
  • பச்சை வாசனை போன பிறகு 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் சோள மாவு சேர்க்கவும். கிரேவி பாதியாக குறைந்தவுடன் பொரித்த காளான், முட்டை கோஸ் போடுங்கள்.  
  • இரண்டு நிமிடங்களுக்கு சூடுபடுத்தி அடுப்பில் இருந்து எடுத்த பிறகு பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயம் தூவி மிதமான சுவையில் சாப்பிடவும். ரோட்டுக்கடை காளான் அட்டகாசமாக இருக்கும். 

மேலும் படிங்க  ஒடக் ஒடக் ரெசிபி : அசைவ பிரியர்களே மலேசியன் ஸ்பெஷல் ஸ்ட்ரீட் புட் தவற விடாதீங்க

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com