herzindagi
image

பிரம்மாண்ட லடாக் முதல் மலைகளின் ராணி ஊட்டி வரை: தம்பதிகளுக்கான டாப் 5 சுற்றுலா தலங்கள்

புதுமண தம்பதிகள் சுற்றுலா செல்லக் கூடிய வகையில் 5 முக்கிய இடங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கண்கவர் இயற்கை அழகுடன் இருப்பதால், எல்லோரும் விரும்பும் வகையில் அமையும்.
Editorial
Updated:- 2025-12-21, 16:58 IST

திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் புதுமண தம்பதிகளுக்கு, தங்களுடைய முதல் இன்பச் சுற்றுலா பயணம் மறக்க முடியாததாக இருக்கும். இதற்காக மனதுக்கு இதமான இடங்களை தேர்வு செய்து பயணம் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில், இந்தியாவில் உள்ள மிக அழகான 5 முக்கிய இடங்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

ஷில்லாங், மேகாலயா:

 

மலைகள் மற்றும் பனிமூட்டம் சூழ்ந்த பள்ளத்தாக்குகளுக்கு இடையே ஷில்லாங் அமைந்துள்ளது. அருவிகள், அமைதியான ஏரிகள் மற்றும் காலனித்துவ கால கட்டடக்கலைகளால் இது தம்பதிகளை வசீகரிக்கிறது. இங்குள்ள குளிர்ச்சியான காலநிலையும், கண்கவர் அழகும், ஐரோப்பிய பாணியிலான ரொமான்டிக் பயணத்தை விரும்பும் தம்பதிகளுக்கு மிகச் சிறந்த இடமாக அமைகிறது.

 

மேலும் படிக்க: தனியாக பயணம் செய்வதில் விருப்பம் கொண்டவரா நீங்கள்? இந்தியாவில் அவசியம் பார்க்க வேண்டிய 5 இடங்கள்

 

லடாக்:

 

லடாக்கின் நிலப்பரப்புகள், ஏரிகள் மற்றும் பிரம்மாண்டமான மலை பாதைகள் உள்ளிட்டவை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்த இடம் சாகசத்தையும், பிரமிக்க வைக்கும் அழகையும் ஒன்றாக விரும்பும் தம்பதிகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. இங்குள்ள அமைதியும், பிரம்மாண்டமான மலைகளின் அழகும் உங்கள் காதல் பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்.

Ladakh

மேலும் படிக்க: கூந்தலை ஆரோக்கியமாக பராமரித்து முடி உதிர்வுக்கு தீர்வு காண வேண்டுமா? இந்த 5 இயற்கை பானங்களை குடித்து பயன் பெறவும்

 

கூர்க், கர்நாடகா:

 

"இந்தியாவின் ஸ்காட்லாந்து" என்று அழைக்கப்படும் கூர்க்கின் காபி தோட்டங்கள், பனி மூடிய மலைகள் மற்றும் காலனித்துவ விடுதிகள் ஒரு கனவு போன்ற பிம்பத்தை உருவாக்குகின்றன.கொட்டும் அருவிகள் மற்றும் அமைதியான ஆறுகள் ஆகியவை ஐரோப்பிய கிராமப்புற அழகை நினைவூட்டும் வகையில் இருக்கும். இங்குள்ள புத்துணர்ச்சியூட்டும் வாசனையும், இயற்கை அழகும் உங்கள் தேனிலவு பயணத்தை மேலும் அழகாக மாற்றும்.

Coorg

 

குமரகம், கேரளா:

 

கேரளாவில் அமைந்துள்ள குமரகம், படகு வீடுகள், அமைதியான நதிகள் மற்றும் பசுமையான தாவரங்களுடன் பார்ப்பதற்கு பிரம்மிப்பாக இருக்கும். தனிப்பட்ட படகு சவாரிகள், அழகிய சூரிய அஸ்தமனம் மற்றும் இயற்கையின் பின்னணியில் அமைந்த அமைதியான ஓய்வு ஆகியவற்றை இங்கு செல்பவர்கள் அனுபவிக்க முடியும். இங்கு படகு வீட்டில் தங்குவது, வெளிநாட்டு நீர்நகரங்களில் பயணம் செய்யும் உணர்வை நிச்சயம் கொடுக்கும்.

 

ஊட்டி, தமிழ்நாடு:

 

தமிழகத்தின் மலைகளின் ராணியான ஊட்டி, பலரும் விரும்பும் சுற்றுலா தலம் ஆகும். பனிமூட்டம் சூழ்ந்த மலைகள், பசுமையான தேயிலை தோட்டங்கள் மற்றும் காலனித்துவ காலக் கட்டடம் ஆகியவை ஒரு கனவு போன்ற உணர்வை உருவாக்குகின்றன. இங்குள்ள தாவரவியல் பூங்காக்கள் மற்றும் ஊட்டி ஏரியில் படகு சவாரி ஆகியவை தம்பதிகளுக்கு சிறந்த அனுபவங்களை தரும். குளிர்ச்சியான காலநிலையும், கண்கவர் இயற்கை சூழலும் உங்கள் பயண நினைவுகளை பசுமையாக்கும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com