இந்த வார இறுதியில் ஜில்லென்று மனதை இதமாக்கும் தென்காசி தென்மலைக்கு விசிட் அடிங்க

மலையேறி செல்ல செல்ல சுற்றிலும் வயல்காடு, பச்சைப் பசேல் என்று உயர்ந்து நிற்கும் மரங்கள், குற்றால சாரல் என கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உள்ளது தென்காசி தென்மலை முருகன் கோவில்.  
image

அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய இளைஞர்கள் முதல் பெண்கள், ஆண்கள் என அனைவரும் எப்பொழுது விடுமுறை கிடைக்கும் என்று எதிர்ப்பார்ப்பு காத்திருப்பார்கள். இவர்களுக்காகவே இந்தாண்டு சுதந்திர தினத்தையொட்டி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை வருகிறது. இந்த நாளில் எங்கேயாவது டூர் செல்ல திட்டமிட்டிருந்தால் மலையை வருடிச் செல்லும் மேகக்கூட்டங்களை ரசித்தப்படி, மலை உச்சியில் உள்ள தென்காசி தென்மலை முருகன் கோயிலுக்கு மறக்காமல் ஒரு விசிட் போடுங்க.

இயற்கை எழில் கொஞ்சும் தென்மலை:

தென்காசி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது குற்றாலம், காசி விஸ்வநாதர் கோவில். இந்த வரிசையில் இயற்கை எழில் சூழந்து அமைந்திருக்கும் தென்காசி தென்மலை முருகன் கோயிலும் இடம் பெற்றுள்ளது. சாதி, மதங்களைக் கடந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகைப் புரிகின்றனர்.

தென்மலையில் சிறப்பு:

முருகன் கோயில் என்றாலே மலை உச்சியில் தான் இருக்கும். ஆனாலும் இந்த தென்மலை கொஞ்சம் வித்தியாசமானது. பொதிகை மலையில் அழகை ரசித்தப்படி மலையேறிச் செல்லலாம். அதிலும் தற்போது குற்றால சாரல் பொய்துக் கொண்டிருப்பதால் ஜில்லென்று மழையில் நனைந்த படி மலையேறலாம்.
தென்மலைக்கு எப்படி செல்லலாம்?

குற்றாலம் செங்கோட்டை மற்றும் பண்மொழி மார்க்கத்தில் செல்லவேண்டும். குற்றாலத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் சுமார் 500 அடி உயரம் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. உங்களுக்கு டிரக்கிங் பிடிக்கும் என்றால் தாராளமாக ஏறலாம். சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக 600 படிக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடந்து செல்பவர்கள் இளைப்பாற்றுவதற்கு ஏற்ப ஆங்காங்கே மண்டபங்கள் உள்ளது. இல்லையென்றால் கார் அல்லது டூவிலரில் கூட செல்லலாம். இங்கு செல்வதற்கு மினி பஸ் கூட உள்ளது.

மேலும் படிக்க:மழைக்காலத்தில் ஜில்லுனு ஒரு சுற்றுலா; கூர்க் போலாமா? இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க

வாரம் முழுவதும் பரபரப்பாக வேலை செய்யும் பலருக்கும், வார இறுதியில் கொஞ்சம் ரிலாஸ்க் தேவைப்படும். இப்படி நீங்களும் நினைத்திருந்தால் இயற்கையின் வரப்பிரசாதமாக உள்ள தென்காசி தென்மலை முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள்.

thenkasi

தற்போது குற்றால சீசனும் தொடங்கி விட்டதால் பழைய குற்றாலம், ஐந்தருவி, பாபநாசம், அகஸ்தியர் அருவி மட்டும் செல்ல வேண்டாம். தென்காசியின் அழகையும், செங்கோட்டைக்கு அருகில் உள்ள கேரள எல்லையின் அழகையும் முழுமையாக ரசிக்க வேண்டும் என்றால் கட்டாயம் ஒருமுறையாவது இங்கே போயிட்டு வாங்க. இயற்கையோடு இக்கோயிலின் கட்டமைப்பும் வியக்க வைக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அப்புறம் என்ன? இன்னும் ஒரிரு நாள் தான் இருக்கு. உடனே டூர் ப்ளாண் போட்டுருங்க.

Image credit - Instagram

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP