
நம்முடைய பிள்ளைகளின் காலை உணவு எப்போதும் பிரெட், பட்டர், ஜாம் இன்றி நிறைவடைவது இல்லை. நான் சொல்வது சரி தானே. நாமும் வேலைச்சுமை காரணமாக, பாட்டிலை ஃபிரிட்ஜில் வைத்து அவர்களுக்கு கொடுக்க செய்வோம். நம்முடைய பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த பிரெட்டையும், ஜாமையும் வாங்குவது எளிதான காரியமும் அல்ல. அதனை அவர்கள் எப்போது தின்று தீர்ப்பார்கள் என்பதனை நம்மால் ஊகிக்க முடியாது. அதோடு, ஒரு பாட்டில் ஜாம் விலை, தோராயமாக நூறு ரூபாயை தாண்டுகிறது. எனவே, கம்மியான விலை கொடுத்து ஒரு சில பொருட்களை வாங்கி, இதனை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். அட ஆமாம். இன்று, சுவையான சத்தான ஆப்பிள் ஜாமை வீட்டிலேயே நாம் எப்படி தயாரிப்பது என்பதை தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

Image Credit: shutterstock
சத்துள்ள சுவையான ஆப்பிள் ஜாமை வீட்டிலேயே செய்யலாம்
ஆப்பிள் ஜாம் செய்ய, ஆப்பிளை நறுக்கி விதை நீக்கிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரம் நிறைய நீர் ஊற்றி, ஒரு நாள் முழுவதும் ஆப்பிளை ஊறவைத்து விடவும்
அடுத்த நாள், அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து அவை மிருதுவாகும் வரை கொதிக்க விடவும். அவை கொதித்ததும், நீரை வடிகட்டிவிட்டு மிக்ஸர் ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.
கடாயில் சர்க்கரை மற்றும் ஆப்பிளை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை வைத்திருக்கவும்.
இப்போது ஏலக்காய் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் இலவங்கப்பட்டை பொடி சேர்த்து சிறிது நேரம் வைத்திருந்து, அடுப்பை அணைக்கவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com