முட்டை இல்லாத மயோனைஸ்; வீட்டில் இப்படி செஞ்சு பாருங்க

உடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத முட்டை இல்லாத மயோனைஸ் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம். விதவிதமான மயோனைஸ் இருந்தாலும் அவற்றின் செய்முறை ஒன்றே. பொருட்கள் மட்டுமே வேறுபடும்.
image

ஃபிரெஞ்ச் ஃபிரைஸ், மோமோஸ், சிக்கன், பிரெட் ஆகியவற்றுடன் சேர்த்து மயோனைஸை நாம் உட்கொள்கிறோம். சமீபத்தில் தெலுங்கானாவில் முட்டை கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸிற்கு ஒரு வருடம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவென்றால் ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் மோமோஸுடன் மயோனைஸ் தொட்டு சாப்பிட்ட பலருக்கும் உடல்நலம் பாதிப்படைந்துள்ளது. 31 வயது பெண் ஒருவர் உயிரிழந்து விட்டார். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மயோனைஸில் உயிரிழக்க செய்யும் அளவிற்கு என்ன தீங்கு உள்ளதென கண்டறிந்து முட்டை பயன்படுத்தி தயாரிக்கும் மயோனைஸிற்கு ஒரு வருட தடை விதித்துள்ளனர். மயோனைஸ் மட்டுமல்ல ஷவர்மாவுக்கும் இதே பிரச்னை ஏற்பட்டு தடை விதிக்கப்பட்டது.

க்ரீமியாகவும், கொஞ்சம் கெட்டியாகவும் உள்ள மயோனைஸ் தயாரிக்க முட்டை, ரீஃபைண்டு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கப்படுகிறது. முட்டை பச்சையாக பயன்படுத்துவதால் இதில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா உற்பத்தியாகிறது. இதையடுத்து மயோனைஸை முறையாக பதப்படுத்த தவறினால் சாப்பிடும் போது வயிற்று பிரச்னை ஏற்படும். சிறிது நாட்களில் அந்த பாக்டீரியா வேகமாக பரவி வயிற்று போக்கு, வாந்தி, ஃபுட் பாய்சனிங் ஏற்படுத்தும். இதன் விளைவாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த பிரச்னை காரணமாக ஐதராபாத்தில் மயோனைஸ் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

eggless mayonnaise making

முட்டை இல்லாத மயோனைஸ் செய்ய தேவையானவை

  • ரீஃபைண்டு எண்ணெய்
  • எலுமிச்சை சாறு
  • பால்
  • உப்பு
  • மிளகு
  • பூண்டு
  • சர்க்கரை

முட்டை இல்லாத மயோனைஸ் செய்முறை

  • முதலில் 120 மில்லி லிட்டர் ரீஃபைண்டு எண்ணெய் மற்றும் 60 மில்லி லிட்டர் காய்ச்சிய பால் எடுத்து எடுத்து ஃப்ரீசரில் அரை மணி நேரம் வைக்கவும்.
  • இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இடித்த மிளகு எண்ணிக்கையில் ஆறு, ஒரு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சர்க்கரை, கால் ஸ்பூன் உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
  • மிக்ஸியில் பல்ஸ் மோடில் மொத்தம் 40-50 விநாடிகளுக்கு விட்டு விட்டு அரைத்தால் மயோனைஸ் தயாராகி விடும். இதை சாப்பிட்டால் பாதிப்பு வராது. பால் சேர்க்க விரும்பாதவர்கள். 120 கிராம் முந்திரி பருப்பு பயன்படுத்தவும்.
  • முந்திரி பருப்பை தண்ணீரில் நன்கு கழுவி அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அதன் பிறகு உலர்த்தி பயன்படுத்துங்கள்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP