
நம்மில் பலர் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்திக் கொள்வதற்காக அயராது ஓடி உழைக்கின்றனர். உடல் நலத்தில் கொஞ்சம் கூட அக்கறை காட்டுவதில்லை. இதனால் கொஞ்சம் மழை பெய்தாலும் கூட காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள். இதோடு மட்டுமின்றி பல உடல் நலப் பிரச்சனைகளும் உடன் சேர்ந்து விடுகிறது. இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் உடலில் உள்ள அனைத்துப் பாகங்களும் சீராக இயங்குவதற்குத் தேவைப்படக்கூடிய உணவுப்பொருட்களை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக தினமும் குடிக்கும் டீக்குப் பதிலாக வீட்டில் இருக்கும் அத்தியாவசிய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்தி சூடான பானம் செய்து பருகலாம். வாரத்திற்கு ஏழு நாட்களும் என்னென்ன கசாயம் பருகலாம்? இதனால் என்னென்ன நன்மைகளைப் பெற முடியும்? என்பது குறித்த தகவல்கள் இங்கே.
மேலும் படிக்க: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் இயற்கை பானங்கள்; காலை நேரத்தில் அருந்தினால் கூடுதல் பலன்
வேலை நிமிர்த்தமாக தினமும் வெளியில் சென்று வரும் நபர்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். இவற்றைத் தவிர்க்க தினமும் காலையில் கொஞ்சம் கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு கலந்த பானம் பருகலாம். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர் இதை வடிகட்டி பானமாக பருகலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் வெப்பநிலை சீராக்கி உஷ்ணத்தைத் தணிக்கிறது.
மேலும் படிக்க: மழைக்காலத்தில் துளசி தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும், உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்
குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய வறட்டு இருமலைக் குணமாக்க வெற்றிலை பானம் சிறந்தது. ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வெற்றிலை மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர் இதை வடிகட்டி தினமும் பருகி வந்தால் போதும். உடல் செரிமானம் சீராவதோடு இருமல் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.
மழைக்காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளைத் தவிர்க்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றால் தூதுவளை பானம் சிறந்தது. தூதுவளை, தூதுவளை, கற்பூரவள்ளி, துளசி போன்றவற்றை சம அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் வடிகட்டி கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகினால் போதும் சளி இருக்காது. அப்படி இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.
சுக்கு,மிளகு,சீரகம், ஓமம் போன்றவற்றை நன்கு பொடியாக்கி தண்ணீரில் நன்கு கொதிக்க விடவும். ஒரு 5 நிமிடத்திற்குப் பின்னதாக சிறிதளவு பனங்கற்ண்டு சேர்த்து பருகினால் போதும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையக்கூடும்.
நமது உடலில் அதிகளவு இருக்கும் பித்த நீரை வெளியேற்ற வேண்டும் என்றால் வெந்தயம் மற்றும் தனியா அதாவது வர கொத்தமல்லி பொடியை நன்கு கொதித்து வைத்து பனங்கற்கண்டு சேர்க்கவும். நன்கு கொதித்து வரும் போது சிறிதளவு உப்பு கலந்துக் குடித்தால் போதும். உடல் நலம் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
உடலுக்குத் தேவையான இரும்புச்சத்துக்கள் அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் முருங்கை, தக்காளி , பூண்டு, மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்துக் குடிக்கவும். முருங்கையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.
மேலும் படிக்க: உங்களது குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் வாழைப்பழ உருண்டை; சுலபமாக செய்யும் முறை இங்கே!
நமக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய சளி, இருமல், உடல் சோர்வு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் , தினமும் காலையில் சுக்கு மல்லி காபி பருகுவது நல்லது.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com