
உணவின் சுவை அதில் சேர்க்கப்படும் மசாலாவில் அடங்கி உள்ளது. இந்த மசாலாக்கள் உணவிற்கு தனித்துவமான சுவை மற்றும் மனத்தை தருகின்றன. குறிப்பாக சிக்கன் போன்ற அசைவ உணவுகளுக்கு சுவை சேர்ப்பது இந்த மசாலா தான். முன்பெல்லாம் மசாலாவை அம்மியில் தான் அரைப்பார்கள். அம்மியில் அரைத்து வைத்த குழம்பின் சுவை தனித்துவமாக இருக்கும். இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் கடைகளில் விற்கப்படும் மசாலாக்களை பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இவை வேலையை சுலபமாக்கினாலும், சுவையில் பின்தங்கியே உள்ளன. உங்களுக்காக சிக்கன் மசாலா தயாரிக்கும் செய்முறையை இப்பதிவில் பகிர்ந்துந்துள்ளோம். நேரம் கிடைக்கும் போது இந்த மசாலாவை அரைத்து வைத்துக்கொண்டல் போதும், வெறும் 10 நிமிடத்தில் சிக்கனை சுவையாக சமைத்திடலாம்.

ஸ்டெப் 1முதலில் வெறும் கடாயில் கறிவேப்பிலையை சேர்த்து குறைவான சூட்டில் நன்கு மொறுகள் ஆகும் வரை வறுத்து எடுக்கவும். இதை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
ஸ்டெப் 2இப்போது காய்ந்த மிளகாவை 2-3 நிமிடங்களுக்கு வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

ஸ்டெப் 3பிறகு அதே கடாயில் தனியா, சீரகம், சோம்பு வெந்தயம், மிளகு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்
ஸ்டெப் 4அடுப்பை அணைத்து, வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் அனைத்தையும் நன்கு ஆறவிடவும். இவற்றை மிக்ஸியில் சேர்த்து நல்ல பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
ஸ்டெப் 5இந்த மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

இந்த சிக்கன் மசாலா பொடியை வைத்து அருமையான சிக்கன் வறுவல் அல்லது குழம்பு செய்து ருசியுங்கள்!!
இந்த பதிவும் உதவலாம்: நான் வீட்டிலேயே முருங்கை இலைப்பொடியை தயாரிப்பது எப்படி?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com