herzindagi
padam milk

Almond Milk at Home in Tamil: வீட்டிலேயே பாதாம் பால் தயார் செய்வது எப்படி?

வீட்டிலேயே பாதாம் பாலை தயார் செய்யலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Editorial
Updated:- 2023-02-05, 18:00 IST

சகிப்புதன்மை கொண்ட நம்மில் பலரும் பால் பொருட்களை உட்கொள்கிறோம் . ஆனால் சிலருக்கு பால் பொருட்களை பிடிக்காது. சிலருக்கு பால் வாசனை என்றாலே அலர்ஜி. பாக்கெட் பால், பசும் பால் பிடிக்காதவர்களுக்கு இன்று பல மாற்றுப்பால்கள் புழகத்திற்கு வந்துவிட்டன. அதில் ஒன்று தான் பாதாம் பால்.

பாதாம் பாலில் ஊட்டச்சத்து மதிப்பு அதிகம் உள்ளது. இது உங்கள் எலும்புகளை பலப்படுத்துகிறது. அதே சமயம் இதில் இருக்கு கலோரிகளின் அளவு மிகவும் குறைவு. பாதாம் பால் அதிக அளவு புரதத்தை கொடுக்கவில்லை என்றாலும், இன்று பலரும் இதை மாற்றுப்பாலாக பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதுவும் பால் போலவே காட்சியளிக்கிறது. மேலும் உணவுக்கு ஒருவிதமான தனி சுவையையும் தருகிறது.

பாதாம் பாலை கடையிலும் வாங்கலாம். ஆனால் தற்போது கலப்படம் பெருகி விட்டதால் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இனி வீட்டிலேயே பாதாம் பாலை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பதிவில் பாதமிலிருந்து எப்படி பாலை பிரித்தெடுப்பது? என்பதை விவரிக்கிறோம். படித்து பயனடையுங்கள்.

பாதாம் பால் என்றால் என்ன?

பாதாம் பால் என்பது தாவர அடிப்படையிலான பால் ஆகும். இது பாதாம் பருப்பிலிருந்து தயாரிக்கப்படுவதால் நீரையும் கார்ப்பு சுவையை பெற்றுள்ளது. பாதாம் பாலை பசும்பாலின் சுவையில் கொடுக்க இன்று பல பிராண்டுகளும் சோதனை செய்து பார்த்து விட்டனர். இதில் கொலஸ்ட்ரால் அல்லது லாக்டோஸ் இல்லை மற்றும் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது.இதை குடிக்கும் போது சற்று இனிப்பு சுவையையும் உணர்வீர்கள்.

இந்த பதிவும் உதவலாம்:காரசாரமான மிளகு ரசம் இப்படி செய்யுங்கள்

பாதாம் பால் தயாரிக்க தேவையான பொருட்கள்

பாதாம் பால் தயாரிக்கும் போது, 1 கப் பாதாம் பருப்புக்கு 2 கப் தண்ணீர் என்ற அளவில் தொடங்கவும். அப்போது தான் சரியான அளவில் பால் உருவாகும். இது சுமார் 2% பாலின் நிலைத்தன்மையை கொண்டது. உங்களுக்கு இன்னும் தண்ணியாக வேண்டுமென்றால் அடுத்த முறை தண்ணீரின் அளவை அதிகப்படுத்துங்கள். கெட்டியான பாதாம் பால் பெற, பாதாம் பருப்பின் அளவை அதிகமாகவும், தண்ணீரின் அளவை சற்று குறைவாகவும் எடுத்து கொள்ளவும்.

almond mlik making

பாதாம் பால் தயாரிக்கும் முறை

  • பாதாம் பருப்புகளை முதல் நாள் இரவு அல்லது 2 நாட்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும். பாதாம் நன்கு ஊறிய பின்பு சிறிது பெரிதாகும். பாதாம் எவ்வளவு நேரம் ஊற வைக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு பால் க்ரீமியாக ஆக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • பிறகு பாதாம் பருப்பை கழுவி தண்ணீர் இல்லாமல் நன்கு வட்டிக்கட்டி கொள்ளவும்.. இப்போது அதில் 2 கப் சுத்தமான தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.
  • 2 நிமிடங்களுக்கு மிக்ஸியை அதி வேகத்தில் வைத்து அரைக்கவும். பாதாம் மைய அரைப்பட வேண்டும். இடை இடையே ஸ்பூன் அல்லது கரண்டியை வைத்து கிளறி விடவும். அப்போது அது நன்கு மென்மையாகி பால் வரும்.
  • பின்பு அதை வடிகட்டி மூலம் வடித்து தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் ஜல்லடை அல்லது சுத்தமான துணியை வைத்து அதன் மேல் அரைத்த பாதாம் கலவையை ஊற்றி இதை ஒருமுறை வடிக்கட்டவும். .
  • கடைசியாக துணியை கெட்டியாக பிடித்து நன்கு பிழிந்து விட்டால் மிச்சம் இருக்கும் பாலும் பாத்திரத்தில் சொட்டும். அவ்வளவு தான் நீங்கள் விரும்பிய கிரீமி மற்றும் கெட்டியான பாதாம் பால் இரண்டும் தயார்.
  • உங்கள் விருப்பம் போல் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • அரைத்த பாதாம்களை குக்கீஸ், ஓட்ஸ், இனிப்புகளை செய்யவும் தேவைப்படும் உணவுகளிலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

பாதாம் பாலை பராமரிப்பது எப்படி?

வீட்டில் தயாரிக்கப்பட்ட பாதாம் பாலை சில நாட்களுக்கு மட்டுமே ஃப்ரிட்ஜில் வைத்து பராமரிக்க முடியும். எனவே தேவைப்படும் அளவுக்கு மட்டும் பாதாம் பாலை தயார் செய்யுங்கள். இன்னும் சில நாட்கள் பராமரிக்க அதை பேஸ்சுரைஸ் செய்யலாம். அதாவது மிதமான சூட்டில் கொதிக்க வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சேமிக்கவும். ஃப்ரிட்ஜில் வைக்கமால் வெளியில் சாதாரணமாக பாத்திரத்தில் மூடி வைத்து பராமரிக்கும் போது, அதை சூடான இடத்தில் வைக்க கூடாது. அப்படி செய்தால் பாதாம் பால் விரைவில் கெட்டுவிடும்.

இந்த பதிவும் உதவலாம்:அசத்தலான சுவையில் வாழை இலை பரோட்டா

பாதாமில் இருந்து பாலை பிரித்து எடுப்பது மிகவும் சுலபம் என்பது உங்களுக்கு இப்போது தெரிந்து இருக்கும்.கண்டிப்பாக நீங்களும் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்

Images Credit: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com