herzindagi
vazai parota

Banana Leaf Parotta in Tamil: அசத்தலான சுவையில் வாழை இலை பரோட்டா

அசத்தலான சுவையில் வாழை இலை பரோட்டா ரெசிபி எப்படி செய்வது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 
Editorial
Updated:- 2023-01-23, 09:20 IST

பரோட்டா பிரியர்கள் மத்தியில் வாழை இலை பரோட்டா ரெசிபி படு ஃபேமஸ். பலருக்கும் பரோட்டாவை பார்த்ததும் ஆசையை அடக்கவே முடியாது. அதன் சுவையும் தரமும் ஹோட்டலுக்கு ஹோட்டல் மாறுபடும். குறிப்பாக பரோட்டா மதுரை நகரத்தின் உணவாகவே கொண்டாடப்படுகிறது. கல் பரோட்டா, பன் பரோட்டா, சால்னா பரோட்டா, முட்டை பரோட்டா, பொரித்த பரோட்டா, கறி பரோட்டா, வரிசையில் இப்போது வாழை இலை பரோட்டாவும் அனைவரும் விரும்பும் உணவாக மாறியுள்ளது.

கேரளாவிலும் இலை பரோட்டா புழக்கத்தில் உள்ளது. சால்னாவுடன் சிக்கன் அல்லது மட்டன் தொக்கை வைத்து அதன் மேல் பரோட்டாவை பிரித்து போட்டு வாழை இலையால் மூடி 15 நிமிடம் அடுப்பு தவாவில் வேக வைத்து எடுத்தால் பூ போல் பிரியும் வாழை இலை பரோட்டா தயார். இதன் வாசனையே பசியை வரவழைத்து நம்மை சாப்பிட தூண்டும். இதை வீட்டிலேயும் செய்யலாம். செய்முறையை இந்த பதிவில் பகிர்கிறோம்.

தேவையான பொருட்கள்

  • சிக்கன் சால்னா – 2 கப்
  • வறுத்த சிக்கன் துண்டுகள் – 1 கப்
  • வாழை இலை – 1
  • நறுக்கிய வெங்காயம் – 1

இந்த பதிவும் உதவலாம்:காரசாரமான மிளகு ரசம் இப்படி செய்யுங்கள்

  • கொத்தமல்லி சிறிதளவு
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்

parota recipe

செய்முறை

  • முதலில் வாழை இலையை அடுப்பில் காட்டி இரு பக்கமும் லேசாக சூடுப்படுத்தி எடுத்து கொள்ளவும்.
  • பின்பு இலையை பிரித்து வைத்து அதன் மேல் 1 பரோட்டாவை வைத்து 1 கப் சால்னா ஊற்றவும்.
  • இப்போது அதில் வறுத்த கறி துண்டுகளை வைத்து நறுக்கிய வெங்காயத்தை தூவவும்.
  • பின்பு அதன் மேல் மீண்டும்1 பரோட்டாவை வைத்து 1 கப் சால்னாவை ஊற்றவும்.
  • இறுதியாக அதன் மேல் சிறிதளவு கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவற்றை தூவி வாழை இலையை பக்குவமாய் மடிக்கவும்.
  • இப்போது நூல் அல்லது வாழை நாரை வைத்து வாழை இலையை கட்டி எடுத்து கொள்ளவும்.
  • பின்பு அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் தடவி அதன் மேல் கட்டி வைத்துள்ள வாழை இலை பரோட்டாவை வைக்கவும்.
  • இப்போது கடாயில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 5 நிமிடம் வேக விடவும்.
  • இப்போது வாழை இலையை திருப்பி போட்டு மீண்டும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.
  • சூப்பரான வாழை இலை பரோட்டா தயார்.

இந்த பதிவும் உதவலாம்:சுண்டி இழுக்கும் பன்னீர் பட்டர் மசாலா

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com