நம் வீடுகளில் எப்படியும் வாரத்தில் ஒரு நாள் ஆவது சாம்பார் வைத்துவிடுவார்கள். குறிப்பாக செவ்வாய், வெள்ளி நாட்கள் என்றாலே சாம்பார் தான் மெனு. காய்கறி சாம்பார், கதம்ப சாம்பார், கிள்ளி போட்ட சாம்பார், அரைச்சுவிட்ட சாம்பார், இடிச்ச சாம்பார், டிபன் சாம்பாரென எக்கச்சக்கமான சாம்பார் வகைகள் தென்னிந்திய சமையலில் இடம் பிடித்துள்ளன. ஆண்கள் சிலருக்கு வீட்டில் செய்யும் சாம்பார் என்றால் சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் ஹோட்டல் சென்றால் தோசைக்கும் இட்லிக்கும் சாம்பாரை ஊற்றி ஊற்றிக் குடிப்பார்கள். அதற்கு காரணம் ஹோட்டல் சாம்பாரில் இருக்கும் ருசி.
சில பெண்கள், இத்தனை வருடங்களாக சாம்பார் வைத்தும் ருசியாக இல்லையே எனப் புலம்புவார்கள். அதுவே ஹோட்டல் சாம்பார் சாப்பிடும்போது எப்படிதான் இந்த சாம்பார் வைக்கிறார்களோ என ருசித்துக்கொண்டே சொல்வார்கள். ஹோட்டல் சுவையில் சாம்பார் வைப்பது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான விஷயம் இல்லை. அந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்டால் போதும். நாமும் வீட்டிலேயே ஹோட்டல் ருசியில் சாம்பார் வைத்து வீட்டில் உள்ளவர்களை அசத்தி விடலாம்.
எனவே இந்த பதிவில் ஹோட்டல் சுவையில் சாம்பார் வைப்பது எப்படி? என்ற ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். படித்துப் பயனடையுங்கள்.
தேவையான பொருட்கள்
- பருப்பு – 2 கப்
- முருங்கைக்காய் – 2
- வெங்காயம் – 1
- தக்காளி – 1
- சின்ன வெங்காயம் – 10
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு – 1 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
- தனியா – 2 டீஸ்பூன்
- சீரகம் – ½ டீஸ்பூன்
- வெந்தயம் – 5
- மிளகு – 5
- கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- காய்ந்த மிளகாய் – 3
- பெருங்காயம் – ¼ டீஸ்பூன்
- தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன்
- புளி – நெல்லிக்காய் அளவு
- வெல்லம் – 1./1/2 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
- நெய் – டீஸ்பூன்
- கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
- முதலில் பருப்பை நன்கு அலசி சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு வேக விடவும்.
- பின்பு மற்றொரு குக்கரில் முருங்கைக்காய், வெங்காயம், தக்காளி, சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகம் வைத்து இறக்கவும்.
- இப்போது ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் தனியா, சீரகம், மிளகு, வெந்தயம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம், தேங்காய் துருவல், புளி இறுதியாக வெல்லம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- நன்கு வறுபட்ட மசாலா பொருட்களை ஆறவிடவும். சூடு தனிந்த பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின்பு அடுப்பில் அடிகனமான கடாயை வைத்து அதில் அரைத்த மசாலா கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.
- இதனுடன் வேக வைத்த காய்கறி கலவை மற்றும் வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.
- இப்போது தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- இறுதியாகத் தாளிப்பதற்கு, கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கி அதை கொதிக்கும் சாம்பாரில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- இப்போது சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கினால் மணமணக்கும் ஹோட்டல் சாம்பார் தயார்.
- கண்டிப்பாக நீங்களும் இந்த செய்முறையைப் பின்பற்றி ஹோட்டல் சுவையில் சூப்பரான சாம்பார் செய்யுங்கள். எல்லோரும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation