மழைக்கு இதமாக ஈரோடு ஸ்பெஷல் நல்லாம்பட்டி சிக்கன் கிரேவி ட்ரை பண்ணலாமா? உங்களுக்கான ரெசிபி டிப்ஸ்

மழைக்காலம் வந்தாலே ஏதாவது காரசாரமாக சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு அனைவருக்கும் இருக்கும். அதிலும் பிடித்தமான சிக்கன் கிரேவியை வழக்கமாக செய்யும் முறை போன்று இல்லாமல் வித்தியாசமாக செய்யணும் னு நினைச்சீங்கன்னா? நல்லாம்பட்டி சிக்கன் கிரேவியை ட்ரை பண்ணிப்பாருங்கள்.  
image

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு விதமான உணவுகள் பிரசிதிப்பெற்றதாக இருக்கும். மதுரை மட்டன் கறி முதல் கன்னியாகுமரி மீன் குழம்பு என தனிச்சுவையுடன் செய்து சாப்பிடும் பழக்கம் மக்களிடம் உள்ளது. அதிலும் மழைக்காலம் வந்தால் சொல்லவே தேவையில்லை. காரசாரமாக என்ன செய்யலாம்? என்ற தேடல் மக்களிடம் அதிகளவில் இருக்கும். இந்த தேடலை நிவர்த்தி செய்யும் விதமாக இன்றைக்கு கொங்கு நாட்டுப் பகுதியில் ஒன்றாக ஈரோடு மாவட்டத்தின் ஸ்பெஷலாக உள்ள நல்லாம்பட்டி நாட்டுக்கோழி கிரேவி எப்படி செய்வது? என்னென்ன பொருட்கள் இதற்கு தேவை? என்பது குறித்து இந்த சமையல் குறிப்பு செய்திகளில் இன்றைக்கு அறிந்துக் கொள்ளலாம்.

ஈரோடு நல்லாம்பட்டி சிக்கன் கிரேவி:

மழைக்கு இதமாக சுட சுட சாப்பாட்டுடன் நல்லாம்பட்டி சிக்கன் கிரேவியை ஊற்றி சாப்பிட்டால் சுவையோடு குளிருக்கு இதமாகவும் இருக்கும். இதற்கு தேவையான பொருட்களின் லிஸ்ட்டை முதலில் அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  • நாட்டுக்கோழி சிக்கன் - 1 கிலோ
  • நல்லெண்ணெய் - அரை லிட்டர்
  • இஞ்சி,பூண்டு விழுது - சிறிதளவு
  • மிளகாய் வத்தல் - 5
  • கடுகு- தாளிப்பதற்கு ஏற்ப
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • சீரகம் - அரை டீஸ்பூன்
  • சோம்பு - அரை டீஸ்பூன்
  • மிளகு - அரை டீஸ்பூன்
  • பட்டை - 2
  • கிராம்பு - 5
  • வர கொத்தமல்லி - சிறிதளவு

நல்லாம்பட்டி சிக்கன் கிரேவி செய்முறை:

  • ஒரு மண்சட்டியில் அல்லது கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதனுடன் கடுகு, மிளகாய் வத்தல், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • அதனுடன் சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • இதோடு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கொஞ்சம் வதக்கிய பின்னதாக சிக்கனைச் சேர்த்து லேசாக கிளறிவிடவும். பிராய்லர் கோழியாக இருந்தாலும் நாட்டுக்கோழியாக இருந்தாலும் இதே போன்று சிக்கனைச் சேர்த்து கொஞ்ச நேரம் வேக வைக்கவும்.
  • இதையடுத்து நல்லாம்பட்டி சிக்கன் கிரேவிக்கான மசாலா தயார் செய்யவும். இதற்கு கிராம்பு, கறிவேப்பிலை, சீரகம், சோம்பு, பட்டை, வர கொத்தமல்லி போன்றவற்றை லேசாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க:ஜில்லென்று பெய்யும் மழைக்கு இதமான கேரள ஸ்பெஷல் பழ பூரி ரெசிபி!

  • இதையடுத்து இந்த மசாலாவை வேக வைத்துள்ள சிக்கனுடன் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும்.
  • இறுதியாக ஒரு தாளிப்பு கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர் சிறு சிறிதாக நறுக்கி வைத்துள்ள பூண்டு மற்றும் மிளகாய் வத்தல் சேர்த்து தாளித்து கிரேவியில் ஊற்றினால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியமான நல்லாம்பட்டி சிக்கன் கிரேவி ரெடி.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP