-1762455185950.webp)
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. காலை நேரத்திலும் அதிகமாக வெயிலின் தாக்கம் இருப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சளி, இருமல், உடல் சோர்வு, காய்ச்சல் போன்ற பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், நாம் அனைவரும் வாழ்வியல் முறையில் கொஞ்சம் மாற்றம் ஏற்படக்கூடும்.
மேலும் படிக்க: பெண்களின் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் ஆரோக்கிய உணவுகளின் லிஸ்ட்!
தேன் உட்கொள்ளுதல்:
பருவகாலங்களில் நம்மை அதிகளவில் பாதிக்கும் தொற்றுகளில் முக்கியமானது சளி. மழையில் சிறிது நேரம் நனைந்தாலும் குழந்தைகளை சட்டென்று பாதித்துவிடும். இந்நேரத்தில் தேன் உட்கொள்வது நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சளி பிரச்சனையைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.
மேலும் தொண்டையில் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் கொதிக்க வைத்த நீரில் உப்பு சேர்த்து கொப்பளிக்க வேண்டும்.
ஆவி பிடித்தல்:
வீசிங் எனப்படும் மூச்சுத்திணறல் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் நொச்சி, வேப்பிலை போன்றவற்றை கொதிக்க வைத்து அதனுடன் மஞ்சள் கலந்து ஆவி பிடிக்கும். ஒருவேளை மூலிகை செடி இல்லையென்றால் தலைவலி தைலம் சேர்த்து ஆவி கட்டாயம் பிடிக்க வேண்டும்.
மூலிகை தேநீர்:
மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய தொற்று பாதிப்பை சரிசெய்ய வேண்டும் மஞ்சள் மற்றும் மிளகு கலந்த பாலைக் காய்ச்சிக் குடிக்கலாம். இதில் உள்ள ஆன்டிசெப்டிக் பண்புகள் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது. சுக்கு, மிளகு கலந்த டீயை பருகுவது நல்லது.
குழந்தைகள் பாதுகாப்பு:
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com