herzindagi
image

மழைக்காலத்தில் சருமம் வறண்டு விடுகிறதா? சரி செய்ய நீங்கள் செய்ய வேண்டியது இவை தான்!

மழைக்காலம் வந்துவிட்டாலே உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு, இயற்கையாவே உடலில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
Editorial
Updated:- 2025-10-23, 16:25 IST

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. சென்றை ஆண்டை விட இந்தாண்டு அதீத மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வைரஸ் தொற்றிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதோடு, சருமத்திலும் சில பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க: இரவு தூங்குவதற்கு முன் முகத்திற்கு இந்த வேலைகளை செய்யுங்கள் - நாள் முழுவதும் அழகாக இருக்கலாம்

வெயில் காலத்தைக் கூட சமாளித்துவிடலாம். குளிர்காலங்களில் சருமத்தில் சுருக்கங்கள், விரிசல்கள், இறந்த செல்கள் வெளியேறாமல் இருப்பது போன்ற பல பிரச்சனைகளால் முகம் பொலிவிழிந்துக் காணப்படும். இவற்றைச் சமாளிக்க வேண்டும் என்றால் குளிர்காலங்களில் அன்றாடம் செய்யக்கூடிய பழக்க வழக்கங்களில் கட்டாயம் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

 

மழைக்காலத்தில் சரும பராமரிப்பு:

வெயில் காலத்தில் மட்டுமல்ல குளிர்காலத்திலும் சருமத்தில் ஈரப்பதம் இருக்காது. அடிக்கும் குளிருக்கு முகத்தில் சொரசொரப்பான தன்மை ஏற்படுவதோடு ஈரப்பதத்தை முற்றிலும் உறிஞ்சிவிடும். இதை சரி செய்ய வேண்டும் என்றால் குளிர்காலத்தில் அடிக்கடி சோப் பயன்படுத்தி முகம் கழுவுவதைத் தவிர்க்க வேண்டும்.

கெமிக்கல் நிறைந்த சோப்புகளை அடிக்கடி பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள ஈரத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறையக்கூடும். சருமத்தின் ஈரப்பதம் குறையும் போது சரும பிரச்சனைகள் உடனே ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


மேலும் படிக்க: குளிர்ந்த காற்றால் சருமம் வறண்டு விடுகிறதா? இந்த ஜூஸ்கள் குடிங்க போதும்.

 

சருமத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்றால் உங்களது உடலுக்குப் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். உடலின் நீர்ச்சத்துக்கள் குறையும் போது சருமமும் பொலிவின்றி இருக்கும். மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

குளிருக்கு இதமான சூடான நீரில் குளிக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்போம். இது தவறான செயல். குளிர்ந்த காலநிலையில் சூடான நீரில் குளிக்கும் போது, சீக்கிரமே சருமம் வறண்டுவிடும். குளிர்ந்த நீரிலோ? சூடான நீரிலோ? குளிக்கக்கூடாது. மாறாக வெதுவெதுப்பான நீரில் எப்போதும் குளிக்க வேண்டும்.

Image credit - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com