Horse Gram Biryani: உடல் எடைக் குறைப்பிற்கு உதவும் கொள்ளு பிரியாணி!

“கொளுத்தவனுக்கு கொள்ளு, எலச்சவனுக்கு எள் என்ற பழமொழிக்கு ஏற்ப இனி டயட்டில் இருந்தாலும் நீங்கள் தாராளமாக கொள்ளு பிரியாணி செய்து சாப்பிடலாம்.

horse gram briyani recipes

வீடுகளில் எந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் பிரியாணி கட்டாயம் இடம் பெற்றிருக்கும். நாம் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டாலும் என்னென்ன ரெசிபிகள் வேண்டும் என்று சமையல் கலைஞர்கள் கேட்பார்கள். அவர்கள் கூறும் அனைத்தையும் கேட்ட பின்னர் பிரியாணி ல என்ன இருக்கு? எனக் கேட்டு சாப்பிடும் பழக்கம் நிச்சயம் நம்மில் பலருக்கும் இருக்கும். சைவமாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும் பிரியாணி என்றாலே ஒரு தனி மவுசு தான்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச்சாப்பிடும் பிரியாணியை, டயட்டில் இருக்கும் நபர்கள் தொட்டுக்கூட பார்க்க மாட்டார்கள். நாவில் எச்சில் ஊறினாலும் சாப்பிட்டால் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாதே? என்ற கவலை ஏற்படும். இனி அந்த கவலை வேண்டாம். “கொளுத்தவனுக்கு கொள்ளு, எலச்சவனுக்கு எள் என்ற பழமொழிக்கு ஏற்ப இனி டயட்டில் இருந்தாலும் நீங்கள் தாராளமாக கொள்ளு பிரியாணி செய்து சாப்பிடலாம். . இதோ ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக.

briyani recipes

தேவையான பொருட்கள்

  • கொள்ளுப்பயிர் - 500 கிராம்
  • கேரட் - 100 கிராம்
  • பீட்ரூட் - 100 கிராம்
  • காலிபிளவர் - 50 கிராம்
  • தக்காளி - 3
  • பச்சைப் பட்டாணி - 50 கிராம்
  • பச்சை மிளகாய் - 4
  • பெரிய வெங்காயம் - 3
  • இஞ்சி,பூண்டு விழுது - சிறிதளவு
  • மட்டன் மசாலா, கரம் மசாலா- காரத்திற்கு ஏற்ப
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • நெய்- 50 கிராம்

கொள்ளு பிரியாணி செய்முறை:

  • கொள்ளு பிரியாணி செய்வதற்கு முதலில் கொள்ளுப்பயிரை கல் இல்லாமல் நன்றாக அலசி எடுத்துக்கொண்டு, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  • வெஜ் பிரியாணிக்கு வெட்டுவது போன்று கேரட், பீட்ரூட், காலிபிளவர், தக்காளி, பெரிய வெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இதையடுத்து ஒரு பெரிய வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும், பின் பிரிஞ்சி இலை, பட்டை, சோம்பு, இஞ்சி,பூண்டு விழுது சேர்த்துத் தாளித்துக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளைச் சேர்த்துவிட்டு அதனுடன் மட்டன் மசாலா, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • 10 நிமிடங்களுக்குப் பிறகு காய்கறிகள் நன்கு வெந்தவுடன், ஏற்கனவே வேக வைத்து வைத்துள்ள கொள்ளு பயிரை அதனுடன் சேர்க்க வேண்டும். இவற்றை நன்றாக சேர்த்துக் கிளறி விட்ட பின்னதாக 5 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கிவிடவும். இதனுடன் புதினா, கொத்தமல்லி தூவி பரிமாறினால் சுவை வேற லெவல்லா இருக்கும்.
  • ஒருவேளை நீங்கள் குக்கரில் பிரியாணி சமைத்தால், கொள்ளு பயிரை வேக வைக்க வேண்டாம். அனைத்து செய்முறைகளையும் செய்துவிட்டு 2 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும்.
horse gram

கொள்ளுவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

உடல் எடையைக்குறைப்பில் உள்ளவர்களின் முதன்மைத் தேர்வு கொள்ளுவாகத் தான் இருக்க முடியும். இதில் உள்ள புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு வலிமையுடன் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. மேலும் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன்களையும் பெற முடியும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP