
குடும்பம் என்பது ஒரு பல்கலைக்கழகம் என்பார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அன்பு, ஆதரவு, பணிவு, அரவணைப்பு, பாசம் என அனைத்தும் ஒரே சேர கிடைக்கும் இடமாக உள்ளது குடும்பம். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டாலும். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் நொடியில் மறந்து தங்களுடைய உறவுகளுக்காக கடவுளை வேண்டிக் கொள்வார்கள். அந்தளவிற்கு உன்னத உறவைக் கொண்டுள்ளார்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும். துன்பத்தையும், சந்தோஷத்தையும் மாறி மாறி கொடுக்கும் குடும்பத்தைக் கண்டுக் கொள்ளாமல் இருக்கும் போது தான் மனிதர்களில் சிலர் மன நிம்மதியை இழக்கின்றனர். எப்போதும் மன நிம்மதியுடனும், வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை மறந்து மன நிறைவுடன் வாழ வேண்டும் என்றால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும்.
குடும்பத்தின் பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்காக ஓடி ஆடி உழைக்கின்றோம். சில வீடுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பணிக்குச் செல்லக்கூடிய சூழல் உள்ளது. குடும்பத்தை எவ்வித பிரச்சனையும் இன்றி வழிநடத்துவதற்கு பணம் அவசியம் தான். அதற்காக குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ளவர்களின் நேரத்தை செலவிடாமல் இருக்கும் போது ஏதோ ஒரு விரக்தி ஏற்படும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் கட்டாயம் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும்.
மேலும் படிக்க: பெண் குழந்தைகளை இப்படி வளர்த்துப்பாருங்கள். நிச்சயம் தைரியமாக இருப்பார்கள்!
அடுத்தாக குடும்ப உறுப்பினர்களுடன் உறவை மேம்படுத்துதல். பொருளாதார தேவைகளுக்காக ஏதாவது தொழில் செய்யும் போது மற்றும் பணிக்குச் செல்லும் போது ஏதாவது சூழலில் சிக்கல்கள் ஏற்படும். இதற்கு நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் உதவியாக இருந்தாலும் பல நாட்களுக்கு நம்முடன் அவர்களால் பயணிக்க முடியாது. இதனால் தான் குடும்ப உறுப்பினர்களுடன் எந்தளவிற்கு இணக்கமாக உள்ளீர்களோ? அந்தளவிற்கு வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் விரைவில் நிறைவேறக்கூடும். குடும்பத்தில் உள்ள அம்மா, அப்பா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, அண்ணன், தம்பி என உறவினர்கள் சொல்லும் ஒற்றை வார்த்தைகள் கூட பதட்டமான சூழலில், நம்பிக்கையையும், ஆதரவையும் தரக்கூடும்.
என்ன தான் மன கஷ்டத்தில் இருந்தாலும் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அந்த வீடே மிகவும் மகிழ்ச்சியானதாக அமையும். பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளும் தங்களுடைய சொந்த பந்தங்களுடன் நேரத்தை செலவிடும் போது வாழ்க்கையில் மரியாதையைக் கற்றுக் கொள்கிறார்கள். குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடும் போது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க: குழந்தைப் பிறந்தவுடன் பணிக்குச் செல்லும் பெண்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ!
குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடும் போது எப்படி வாழ்க்கையில் சிக்கல்கள் வந்தால் தீர்க்க முடியும் என்பதைக் கற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் இருக்கும். எனவே எப்படிப்பட்ட சிக்கல்களையும் விரைவில் கையாளும் திறனைக் கற்றுக்கொள்ள முடியும்.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com