Curd Chutney Recipe: தயிரிலும் சட்னி செய்யலாம். இதோ சிம்பிள் ரெசிபி டிப்ஸ்!

தயிர், வெங்காயம், பூண்டு சேர்த்து உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் தயிர் சட்னி ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக.

 

 

curd chutney making tips

நம்மில் பலரது காலை மற்றும் மாலை இரு வேளைகளில் இட்லி, தோசை கண்டிப்பாக இருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அவசர அவசரமாக சாம்பார் அல்லது தேங்காய், தக்காளி சட்னிகளை வைத்துக் கொடுப்போம். தினமும் இந்த சட்னிகளைச் சாப்பிடும் குழந்தைகளை ஏதாவது புதுசா செய்து கொடுங்கள் என்றால் அப்பொழுது தான் பருப்பு சட்னி, கொத்தமல்லி அல்லது புதினா சட்னிகளை செய்துக் கொடுப்போம். ஆனால் என்ன பருப்பை ஊற வைத்து செய்ய வேண்டும் என்றால் சட்டென்று செய்து விட முடியாது. எனவே வழக்கம் போல பல நேரங்களில் தேங்காய் சட்னி தான் நம்முடைய டிபன்களுக்கு வைக்கப்படும்.

idli dosai

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதோ சமைத்துவிட்டார்கள் என்பதற்காக விருப்பமின்றி சாப்பிடுவோம். இனி அந்த கவலை வேண்டாம். தக்காளி, தேங்காய் சட்னிக்கு மாற்றாக ஆரோக்கியத்துடன் கூடிய தயிர் சட்னி செய்துப் பாருங்கள். தயிர்ல எப்படி சட்னின்னு கேட்கிறீங்களா? இதோ உங்களுக்காகவே சுலபமாக தயிர் சட்னி எப்படி செய்வதென்று இங்கே தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  • தயிர்- கால் லிட்டர் முதல் அரை லிட்டர்
  • எண்ணெய் - தேவையான அளவு
  • பெரிய வெங்காயம் - 3
  • மிளகாய் வத்தல் - 5
  • பூண்டு - 10
  • மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
  • கரம் மசாலா- அரை டீஸ்பூன்
  • கடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
curd chutney making

செய்முறை:

  • தக்காளி, தேங்காய் சட்னிக்கு மாற்றாக தயிர் சட்னி செய்வதற்கு முதலில் வெங்காயம், பூண்டு போன்றவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, தனியா தூள் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்த பின்னதாக, நறுக்கி வைத்த வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன், அதனுடன் ஏற்கனவே கலந்து வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
  • காரம் தேவைப்பட்டால் இதனுடன் சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும். சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துவிட்டு கொத்தமல்லி இலைகளை மேலே தூவி விட்டால் போதும் சுவையான தயிர் சட்னி ரெடி.
variety of chutneys

அப்புறம் என்ன? அடிக்கிற வெயிலுக்கு கார சட்னிகளை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு உடலுக்கு ஆரோக்கியத்தையும் ,குளிர்ச்சியையும் தரக்கூடிய தயிர் சட்னியை இனி செய்து சாப்பிடுங்கள்.

மேலும் படிங்க:உடல் எடையைக் குறைக்க தேங்காய் எண்ணெய் உதவுமா?

Image source: Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP