chicken chukka recipe

ஹெல்தியான கறிவேப்பிலை சிக்கன் சுக்கா சாப்பிட ஆசையா? இதோ ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக!

சுவையான மற்றும் ஆரோக்கியமான கறிவேப்பிலை சிக்கன் சுக்கா செய்வதற்கான ஈஸி டிப்ஸ்கள் இது தான்
Editorial
Updated:- 2024-06-24, 20:26 IST

குழந்தைகளுக்கு விதவிதமாக செய்து தர வேண்டும் என்ற ஆசையில் உள்ள பெற்றோர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் இதோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடக்கூடிய சிக்கனை வைத்து மிகவும் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் ரெசிபி ட்ரை பண்றீங்களா? அப்படியென்றால்  உங்களுக்காகவே கறிவேப்பிலை சிக்கன் சுக்கா ரெசிபி உள்ளது. இதோ அதற்கான சிம்பிள் டிப்ஸ்கள்..

chukka making

நாவிற்கு சுவையூட்டும் கறிவேப்பிலை சிக்கன் சுக்கா:

தேவையான பொருட்கள்:

  • கறிவேப்பிலை -  1 கிலோ
  • சிக்கன் - 1 கிலோ
  • மிளகாய் வத்தல்- 10
  • மிளகு - சிறிதளவு
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • கடுகு- சிறிதளவு
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
  • பச்சை மிளகாய் - 4
  • தக்காளி - 2
  • இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
  • உப்பு- சுவைக்கு  ஏற்ப
  • மஞ்சள்  தூள்- 1 தேக்கரண்டி

செய்முறை:

  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடக்கூடிய கறிவேப்பிலை சிக்கன் சுக்கா ரெசிபி செய்ய வேண்டும் என்றால், முதலில் கடாயை சூடேற்றி எண்ணெய் ஊற்றாமல் கறிவேப்பிலையை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து கடாயில் சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளளகு, மிளகாய் வத்தல் போன்றவற்றைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஆறிய பின்னதாக இவற்றையெல்லாம் பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தற்போது கறிவேப்பிலை சிக்கன் சுக்கா ரெசிபி செய்வதற்கான மசாலா ரெடி.
  • பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
  • இந்த கலவை நன்கு வதங்குவதற்குள், ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் உப்பு, மஞ்சள் சேர்த்த பின்னதாக வதக்கிய தக்காளியுடன் சேர்க்கவும். ஒரு 10 நிமிடங்களுக்குப் பின்னதாக சிக்கன் சுக்காவிற்காக அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்க்க வேண்டும். இதனுடன் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை பொடியையும் சேர்த்து சுருள வதக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும் வரை கடாயில் போட்டு நன்கு வதக்கிக் கொண்டே இருக்கவும். இறுதியில் கறிவேப்பிலை, புதினா தூவி இறக்கினால் போதும் சுவையான கறிவேப்பிலை சிக்கன் சுக்கா ரெசிபி ரெடி. 

chukka

  • இந்த ரெசிபியை நீங்கள் சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம். அல்லது இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன்களுக்கு சைடு டிஸ்ஸாகவும் பயன்படுத்தலாம். கறிவேப்பிலை அதிகமாக சேர்த்திருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பதால் வாரத்திற்கு ஒரு முறையாவது உங்களது குழந்தைகளுக்குச் செய்துக் கொடுக்க மறந்துவிடாதீர்கள்.
Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com