herzindagi
image

தீபாவளிக்கு இட்லி - கறி குழம்பு ருசிக்க பக்காவான ரெசிபி

தீபாவளி நாளில் இட்லி, கறி குழம்பு ருசிக்க தவறினால் அந்த நாள் முழுமை பெறாது. காலையிலேயே கடைக்கு சென்று கறி வாங்கி வந்து சுட சுட இட்லி தயாரித்து இரண்டு கரண்டு மட்டன் குழம்பு ஊற்றி ருசித்தால் மட்டுமே தீபாவளி கொண்டாட்டம் திருப்தி அடையும். தீபாவளி ஸ்பெஷல் இட்லி, கறி குழம்பு ரெசிபி உங்களுக்காக...
Editorial
Updated:- 2024-10-29, 13:29 IST

தீபாவளி கொண்டாட்டம் வட இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் வேறுபடும் என்று சொல்லலாம். வட இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு சைவ உணவுமுறையை கடைபிடிப்பர். அதுவே தென் இந்தியாவில் இட்லி கறி குழம்பு அல்லது தோசை பாயா சாப்பிடும் வழக்கம் உள்ளது. தெலுங்கு மொழி பேசும் மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் தீபாவளிக்கு முன்பு விரதம் கடைபிடித்து தீபாவளி நாளில் கறி எடுப்பது வழக்கம். அப்படி தீபாவளி ஸ்பெஷல் இட்லி மற்றும் கறி குழம்பை செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். பண்டிகை நாளில் காலையிலேயே இட்லி, கறி குழம்பு என்றால் அடடட டா... சுவையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

idli kari kulambu

இட்லி & கறி குழம்பு செய்யத் தேவையானவை

  • இட்லி அரிசி
  • உளுத்தம் பருப்பு
  • வெந்தயம்
  • உப்பு
  • தண்ணீர்
  • மட்டன் கறி
  • நல்லெண்ணெய்
  • மிளகு
  • சீரகம்
  • சோம்பு
  • கிராம்பு
  • பட்டை
  • பூண்டு
  • இஞ்சி
  • சின்ன வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • தேங்காய் துருவல்
  • கொத்தமல்லி
  • இஞ்சி - பூண்டு பேஸ்ட்
  • கறிவேப்பிலை
  • தண்ணீர்
  • தக்காளி
  • உப்பு
  • மல்லித் தூள்
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்

மேலும் படிங்க தீபாவளி ஸ்பெஷல் குலாப் ஜாமுன் செய்முறை!

இட்லி செய்முறை

  • இரண்டு கப் இட்லி அரிசி, அரை கப் உளுத்தம் பருப்பு, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் நன்கு கழுவி சுமார் 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • கிரைண்டரில் இவற்றை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஆட்டி எடுத்து உப்பு சேர்த்து தனியாக வைக்கவும்.
  • 8 மணி நேரத்தில் மாவு புளித்துவிடும். இட்லி தட்டில் மாவு ஊற்றும் முன்பாக கொஞ்சம் நல்லெண்ணெய் தடவுங்கள்.
  • மிதமான சூட்டில் 8-10 நிமிடங்களில் இட்லி நன்கு வெந்துவிடும்.

மட்டன் குழம்பு செய்முறை

  • முதலில் மசாலா பேஸ்ட் தயாரிக்கலாம். மட்டன் குழம்பு செய்வதற்கு அரைமணி நேரம் கூட எடுக்காது. எளிதில் செய்துவிடலாம்.
  • கடாயில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஒன்றரை ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு சேர்க்கவும்.
  • இதனுடன் 5 கிராம்பு, 2-3 பட்டையை உடைத்து போடுங்கள். இதனுடன் 10 பல் பூண்டு, நான்கு துண்டு இஞ்சி போட்டு வறுக்கவும்.
  • அடுத்ததாக 100 கிராம் சின்ன வெங்காயம், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அரை மூடி தேங்காயை துருவி போட்டு இரண்டு நிமிடங்களில் அடுப்பை ஆஃப் செய்யவும்.
  • இதை கொஞ்சம் நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்திடுங்கள்.
  • குக்கரில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அரை ஸ்பூன் சீரகம், இரண்டு பெரிய வெங்காயம் பொடிதாக நறுக்கி சேர்த்திடுங்கள்.
  • இப்போது ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், இரண்டு தக்காளி நறுக்கி போட்டு இரண்டு - மூன்று நிமிடங்கள் கழித்து ஒரு கிலோ மட்டனை நன்கு கழுவி சேர்த்திடுங்கள்.
  • மிக்ஸியில் அரைத்த மசாலாவை சேர்த்து கலந்து விடுங்கள்.
  • தலா ஒன்றரை ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள், ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் கொத்தமல்லி போட்டு குக்கரை மூடி விடுங்கள்.
  • 6 விசில் அடித்தவுடன் எடுங்கள். இட்லியும் சூப்பரான மட்டன் குழம்பு ரெடி.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com