Happy Diwali Wishes in Tamil 2025: இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் பலரும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கின்றனர்.
மேலும் படிக்க: Diwali Rangoli Designs 2025: தீபாவளியை முன்னிட்டு உங்கள் வீட்டை அலங்கரிக்கும் ரங்கோலி; கண்ணைக் கவரும் வண்ண டிசைன்கள்!
புத்தாடை, பட்டாசுகள் மற்றும் பலகாரங்கள் இல்லாமல் எந்த ஒரு தீபாவளி பண்டிகையும் நிறைவு பெறாது. தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு பலரும் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.
அதன்படி, தீபாவளியை முன்னிட்டு உங்கள் நேசத்துக்குரியவர்களுக்கு பகிர்ந்து மகிழக் கூடிய சில வாழ்த்து செய்திகளை தற்போது காணலாம். இவற்றை பகிர்ந்து உங்கள் அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துங்கள். இது உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
தீபாவளி கொண்டாட்டம் உங்கள் மனதில் அன்பு, அமைதி, சந்தோஷம் என மூன்றையும் பரப்பும் ஒரு அழகிய ஒளியாய் திகழட்டும். இந்த பண்டிகை உங்கள் ஒவ்வொரு கனவையும் நிறைவேற்றிட ஒரு புதிய தொடக்கமாக அமைந்திட வாழ்த்துகள்!
தீபங்களின் ஒளி உங்கள் வாழ்க்கையை வழிநடத்தி, உங்களுக்கு ஒளிமயமான நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி அளிக்கட்டும். இந்த தீபாவளி உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்யும், நல்லதொரு தொடக்கத்தை கொடுப்பதாக இருக்கட்டும். தீபாவளி வாழ்த்துகள்.
நண்பர்களே, உங்கள் வாழ்வில் தீபங்களின் ஒளி புதிய பாதைகளை காண்பித்து, உங்களுக்கு அன்பின் ஒளியை வழங்க வேண்டும். இந்த தீபாவளி உங்களின் ஒற்றுமையை மேலும் அதிகரிக்கட்டும்.
மேலும் படிக்க: பளபளக்கும் சருமம், பட்டுப் போன்ற கூந்தல்; தீபாவளியின் போது ஏற்படும் மாசுபாட்டை தடுக்க உதவும் இயற்கை வழிகள்
எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல்
உங்கள் வாழ்வில் ஒளி பரவட்டும்,
உங்களது நாட்கள் எல்லாம் இனிதாக அமையட்டும்,
வெற்றி உனதாகட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபங்கள் ஒளிர்வது போல்
உங்களுடைய வாழ்வும் ஒளிரட்டும்
பட்டாசு வெடித்து சிதறுவது போல்
உங்கள் துன்பங்களும் சிதறட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
வண்ண வண்ண மத்தாப்பு வெடித்து,
பல வண்ண புத்தாடை உடுத்தி,
பல வகை இனிப்புகளை உண்டு,
இனிமையான நாளை கொண்டாடுவோம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
நீங்கள் ஏற்றும் தீபம்
உங்கள் வாழ்வில் இன்பம், மகிழ்ச்சி,
ஆரோக்கியம் மற்றும் செல்வம்
ஆகியவற்றை ஏற்றம் செய்யட்டும்.
தீபாவளி நல்வாழ்த்துகள்.
தீபங்கள் ஜொலிக்க
பட்டாசுகள் வெடிக்க
மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாட
அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துகள்.
என்றென்றும் உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com