herzindagi
what is white pasta sauce made of

குழந்தைகளுக்கு பிடித்தமான ஒயிட் சாஸ் பாஸ்தா! 15 நிமிடங்களில் செய்யலாம்

15 நிமிடங்களில் குழந்தைகளை குஷிப்படுத்த இந்த ஒயிட் சாஸ் பாஸ்தாவை செய்து பாருங்கள். உங்கள் பேச்சைத் தட்டாமல் கேட்பார்கள்.  
Editorial
Updated:- 2024-04-30, 09:08 IST

ஊட்டச்சத்து நிறைந்த உணவு செய்முறையில் உடல் ஆரோக்கியத்திற்கான உணவுகளை ஹெர் ஜிந்தகி தொடர்ந்து பகிர்ந்து வருகிறது. அடுத்ததாக நாம் பார்க்க போகும் உணவு மேகி, அத்தோ போல இருந்தாலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆம் எளிதான ஒயிட் சாஸ் பாஸ்தாவின் செய்முறையை பார்க்கலாம்.

white sauce pasta recipe

ஒயிட் சாஸ் பாஸ்தா செய்யத் தேவையானவை 

  • பாஸ்தா
  • மைதா மாவு 
  • பாஸ்
  • செட்டார் சீஸ்
  • பூண்டு
  • காளான்
  • வெண்ணெய் 
  • ஸ்வீட் கார்ன்
  • மிளகு பவுடர்
  • ரெட் சில்லி ஃப்ளேக்ஸ்
  • உப்பு 
  • ஆர்கனோ
  • தண்ணீர்

ஒயிட் சாஸ் பாஸ்தா செய்முறை 

  • இதை செய்வதற்கு முதலில் பாஸ்தா தயாரிக்கலாம். ஒரு கடாயில் நீங்கள் பயன்படுத்தும் பாஸ்தா அளவிற்கு தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதித்த பிறகு தேவையான அளவு உப்பு போடுங்கள்.
  • இப்போது 100 கிராம் பாஸ்தா போடுங்கள். சுமார் 15 நிமிடங்களுக்கு பாஸ்தாவை வேக வைக்கவும். பாஸ்தா மென்மையாகி விடும். பாஸ்தாவில் இருந்து தண்ணீரை வடிகட்டிய பிறகு கொஞ்சமாக எண்ணெய் சேர்க்கவும்.
  • இதனுடன் சேர்க்க கூடிய காய்கறிகளை வேக வைக்கலாம். ஒரு பேனில் மூன்று ஸ்பூன் வெண்ணெய் உருக்கி இரண்டு பூண்டு, இதன் பச்சை வாடை போன பிறகு கொஞ்சம் காளான் சேருங்கள்.
  • காளான் வெந்த பிறகு கால் கப் பச்சை பட்டாணி, கால் கப் ஸ்வீட் கார்ன், அரை குடை மிளகாய் போடுங்கள்.
  • இறுதியாக கொஞ்சம் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கி விடுங்கள்.
  • அடுத்ததாக ஒயிட் சாஸ் தயாரிக்க மற்றொரு பேனில் நான்கு ஸ்பூன் வெண்ணெய் உருக்கி ஐந்து ஸ்பூன் மைதா மாவு சேர்க்கவும்.
  • அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். மாவு கருகி விடக் கூடாது. மாவின் பச்சை வாடை போன பிறகு இரண்டு கப் பால் சேர்க்கவும்.
  • பால் கொஞ்சம் கொதித்த பிறகு கிரீமியாக மாறும். இதில் கொஞ்சம் துருவிய சீஸ் சேருங்கள். சீஸ் சேர்த்தால் சாஸ் கூடுதல் கிரீமியாக இருக்கும். கால் கப் செட்டார் சீஸ் பயன்படுத்துங்கள்.
  • சீஸ் விஸ்க் வைத்து அடிக்கவும். இதன் பிறகு வேக வைத்த காய்கறிகளை சேருங்கள். இப்போது வேக வைத்த பாஸ்தாவையும் போடுங்கள். 
  • இறுதியாக சீசனின் செய்ய பீட்ஸாவுக்கு பயன்படுத்தும் ரெட் சில்லி ஃப்ளேக்ஸ், ஆர்கனோ தலா கால் ஸ்பூன் சேர்க்கவும். கொஞ்சம் மிளகு மற்றும் உப்பு சேர்த்தால் சுவையான ஒயிட் சாஸ் பாஸ்தா தயார்.

இது இரண்டு பேருக்கு போதுமான அளவில் இருக்கும். சிலர் ஒயிட் ஒயின் ஊற்றுவார்கள். குழந்தைகளுக்கு கொடுப்பதால் நாம் ஒயிட் ஒயின் சேர்க்கவில்லை.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com