பாரம்பரியமும் சுவையும் நிறைந்த தேங்காய் திரட்டுப்பால ரெசிபி; பண்டிகைகால ஸ்வீட்

சுப நிகழ்வுகள் மற்றும் விழா காலங்களில் தயாரிக்கப்படும் சுவையான தேங்காய் திரட்டுப்பால் எப்படி செய்வது என பார்க்கலாம். தேங்காய் திரட்டுப்பால் தஞ்சாவூர் பகுதிகளில் மிக பிரபலம்.
image

தமிழகத்தில் பெரும்பாலான விருந்துகளில் இலையில் தேங்காய் திரட்டுப்பால் வைக்கப்படும். தேங்காய் துருவல், வெல்லம் போட்டு தயாரிக்கப்படும் தேங்காய் திரட்டுப்பால் சுவை மிகுந்தது. முன்பெல்லாம் திருமண நிக்ழவுகளில் அல்வாவிற்கு அடுத்தப்படியாக தேங்காய் திரட்டுப்பால் வைக்கப்படும். தீபாவளி பலகாரத்தில் தேங்காய் திரட்டுப்பாலும் இடம்பெறும். பார்ப்பதற்கு அல்வா போல இருக்கும். அல்வாவை விட சுவை மிகுந்ததாக தெரியும். தரமான நெய் பயன்படுத்தினால் போதும் தேங்காய் திரட்டுப்பாலின் முழு சுவையை அனுபவிக்கலாம்.

thengai therattipal

தேங்காய் திரட்டுப்பால் செய்ய தேவையானவை

  • தேங்காய் துருவல்
  • பவுடர் வெல்லம்
  • ஏலக்காய் தூள்
  • முந்திரி
  • உலர் திராட்சை
  • நெய்
  • உப்பு
  • பாசிப்பருப்பு

தேங்காய் திரட்டுப்பால் செய்முறை

  • கடாயில் மூன்று ஸ்பூன் பாசிப்பருப்பு போட்டு எண்ணெய், நெய் ஊற்றாமல் வறுக்கவும். பாசிப்பருப்பின் நிறம் மாறியதும் சூடுபடுத்துவதை நிறுத்திவிடுங்கள்.
  • மிக்ஸி ஜாரில் ஒன்றரை கப் தேங்காய் துருவல், வறுத்த பாசிப்பருப்பு போட்டு முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். அதன் பிறகு 100 மில்லி தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும்.
  • பேனில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி தலா பத்து முந்திரி பருப்பு, உலர் திராட்சை போட்டு வறுக்கவும்.
  • கடாயில் ஐந்து ஸ்பூன் நெய் ஊற்றுங்கள். நெய் உருகியதுடன் அரைத்த தேங்காய்ப்பால் - பாசிப்பருப்பு சேர்க்கவும்.
  • மிதமான சூட்டில் தேங்காய் திரட்டுப்பால் தயாரிக்கவும். ஏனெனில் இது அல்வா கிண்டுவது போல இருக்கும்.
  • 2-3 நிமிடங்கள் கழித்து முக்கால் கப் பவுடர் வெல்லம் சேருங்கள். வெல்லம் போட்டவுடன் நன்கு கலக்கவும்.
  • அடுத்ததாக ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேருங்கள். இது தேங்காய் திரட்டுப்பாலை கெட்டியாக்கும்.
  • நெய் மொத்தமாக உறிஞ்சப்பட்டவுடன் ஏலக்காய் தூள் ஐந்து கிராம், சுவையை அதிகரித்திட ஒரு சிட்டிகை உப்பு போவுடம்.
  • அடிபிடிக்காத மாதிரி இதை கிண்டி கொண்டே இருங்கள். இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை போட்டு கிண்டவும்.
  • நெய் பிரிந்து வந்து தேங்காய் திரட்டுப்பால் மிதப்பது போல் தெரியும் போது அடுப்பில் இருந்து எடுத்துவிடுங்கள்.
  • தேங்காய் திரட்டுப்பால் முதன் முறையாக சுவைத்த யாவரும் அதை அடிக்கடி சுவைக்க விரும்புவார்கள்.
  • வீட்டில் உள்ள குட்டீஸிற்கு இது கண்டிப்பாக பிடிக்கும்.

மேலும் படிங்கபெங்காலி ஸ்பெஷல் சூப்பரான ரசமலாய் ரெசிபி; வீட்டில் செய்து ஜமாய்ங்க

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP