சுவீட் கடைக்கு சென்றால் பாத்திரத்தில் மஞ்சள் நிற பாலில் ரசகுல்லா ஊறவைத்திருப்பார்கள். இதை பார்க்கும் போதே சுவைக்க வேண்டும் என நமக்கு தோன்றும். அதென்ன பெங்காலி ஸ்பெஷல் ரசமலாய் என நீங்கள் கேட்கலாம் ? வட மாநிலங்களில் வித விதமான ரசமலாய் கிடைத்தாலும் மேற்கு வங்கத்தில் கிடைக்கும் ரசமலாயின் சுவை தனித்துவமானது. ரசமலாய் மட்டுமல்ல ரசகுல்லாவும் சூப்பராக இருக்கும். முன்னாள் கிரிக்கெட் வீரர் சர்வதேச அரங்கில் 100 சதங்கள் விளாசிய போது மேற்கு வங்க முதல்வர் அவருக்கு 100 பெங்கால் ரசகுல்லா பரிசளித்தார். சர்க்கரை பாகில் பனீர் போடும் போது சில சமயங்களில் அது உடைந்துவிடும். இதற்கு பாக்கெட் பால் பயன்படுத்துவதே காரணமாகும். பனீர் செய்வதற்கு பசும் பால் பயன்படுத்துங்கள். சரியாக பக்குவத்தில் ரசமலாய் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
பெங்காலி ரசமலாய் செய்ய தேவையானவை
- பசும் பால்
- சர்க்கரை
- கொழுப்பு நிறைந்த பால்
- வினிகர்
- ஏலக்காய் படவுர்
- குங்குமப்பூ
- ரோஸ் வாட்டர்
- நட்ஸ்
பெங்காலி ரசமலாய் செய்முறை
- ரசமலாய் செய்வதற்கு முதலில் சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும். பெரிய கடாயில் ஒரு கிலோ சர்க்கரை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- பாகு நன்கு கொதிக்கும் போது கால் டம்ளருக்கும் குறைவாக பால் ஊற்றவும். இப்படி செய்வதால் சர்க்கரையில் இருக்கும் அழுக்கு மேலே வரும். அதை கரண்டி பயன்படுத்தி எடுத்துவிடுங்கள்.
- ஒரு கம்பி பதம் வந்த பிறகு சர்க்கரை பாகினை தனியாக வைக்கவும். இதனிடையே ஒரு கிராம் குங்குமப்பூவை 100 மில்லி வெதுவெதுப்பாக தண்ணீரில் கரைக்கவும். இது ரசமலாய்க்கு நிறம் கொடுக்கும்.
- பசும் பாலில் பனீர் தயாரிக்க போகிறோம். கடாயில் ஒரு லிட்டர் பசும்பால் ஊற்றி கொதிக்கவிடுங்கள். இதில் 3 ஸ்பூன் வினிகர் சேர்க்கவும்.
- பால் திரியும் போது ஒரு கரண்டி குளிர்ந்த தண்ணீர் ஊற்றுங்கள். பனீர் உருவாக ஆரம்பிக்கும் தருணத்தில் வெள்ளை துணியில் வடிகட்டி அரை மணி நேரத்திற்கு அப்படியே வைத்துவிடுங்கள்.
- தண்ணீர் வடிந்ததும் வெள்ளை துணியை முடிச்சு கட்டி மீண்டும் அரை மணி நேரம் வைத்துவிடுங்கள். பனீர் கிடைத்துவிடும்.
- பெரிய எலுமிச்சை சைஸில் பனீர் எடுத்து பீஸ் பீஸாக வெட்டி சிறிய கோலி குண்டு சைஸிற்கு உருட்டி தட்டடவும்.
- ஒரு கம்பி பதத்தில் தயாரான சர்க்கரை பாகினை பாதி பாதியாக எடுத்துக்கொள்ளவும். ஒரு பாதியில் இந்த பனீரை போட்டு கொதிக்கவிடுங்கள்.
- சிறிய சைஸில் தட்டினாலும் சர்க்கரை பாகில் கொதிக்கவிடும் போது மீடியம் லட்டு சைஸிற்கு மாறும். 5 நிமிடங்களுக்கு வேகவிட்டால் போதும்.
- இதை அப்படியே தனியாக வைத்திருக்கும் சர்க்கரை பாகில் போட்டு ஒரு மணி நேரத்திற்கு ஊறவிடுங்கள்.
- அடுத்ததாக ரசமலாய் பால் தயாரிக்கலாம். கொழுப்பு நிறைந்த பாலை 20 நிமிடங்களுக்கு சூடுபடுத்தி 100 கிராம் சர்க்கரை போடுங்கள்.
- பால்கோவா செய்யும் போது ஆடை வருவது போல் வரும். அதை அவ்வப்போது எடுத்துவிடுங்கள். பால் கொஞ்சம் கெட்டியானதும் குங்குமப்பூ தண்ணீரை ஊற்றவும்.
- அடுத்ததாக கால் ஸ்பூன் ஏலக்காய் பவுடர், ஒரு சொட்டு ரோஸ் வாட்டர், நறுக்கிய பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை சேர்க்கவும்.
- சர்க்கரை பாகில் ஊறிய உருண்டைகளை ரசலமாய் பாலில் இரண்டு மணி நேரம் ஊறவிடுங்கள்.
- அட்டகாசமான பெங்காலி ரசமலாய் ரெடி.
மேலும் படிங்கஉருளைக்கிழங்கு சிப்ஸை இனி கடையில் வாங்க வேண்டாம்; வீட்டிலேயே செய்து ருசிக்கலாம்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation