juicy makmal puri

Makmal Puri Recipe : தித்திக்கும் மக்மல் பூரி செய்முறை

உங்களிடம் ஒரு மணி நேரம் இருந்தால் இந்த மக்மல் பூரி ஸ்வீட்டை செய்து அன்புரிக்குரியவர்களுக்கு வழங்கி இன்பமாக்குங்கள்
Editorial
Updated:- 2024-02-05, 14:50 IST

மாலை நேரத்தில் நாம் தேநீர் அல்லது காபி அருந்துகிறோமோ இல்லையோ சூடாக பஜ்ஜி, போண்டா அல்லது இனிப்பு போளி, காளான் என எதாவது சாப்பிட வேண்டும் என  நினைப்போம். கடந்த 20 ஆண்டுகளாகத் தான் இனிப்பு போளியை பல கடைகளில் தயாரிக்கின்றனர். அதற்கு முன்பாக கொஞ்சம் பெரிய கடைகளில் மக்மல் பூரி கிடைக்கும். அதைப் பார்க்கும் போதே கட்டாயம்  நாக்கில் எச்சில் ஊரும்.

இதைத் தற்போது ஒரு சில கடைகளிலேயே தயாரிக்கின்றனர். தாத்தா காலத்து ஸ்வீட் ஆக மாறிவிட்டது என்றே சொல்லலாம். இதை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளும் முன்பாக 30 - 40 ஆண்டுகளுக்கு முன்பாக இதன் தயாரிப்பு முறை எப்படி இருந்தது என பார்க்கலாம். 

அன்றைய காலத்தில் தயாரிக்கப்படும் பலகாரங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படாது என்பதால் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு மட்டுமே அவை கெடாமல் இருக்கும். இரண்டு நாட்களுக்குள் லட்டு, ஜாமூன், மைசூர் பாக் போன்றவை விற்றுத் தீரவில்லை என்றால் மூன்றாவது நாளில் இவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு உடைத்து நன்றாகக் கலந்து பூரி செய்து அதற்குள் திணித்து விடுவார்கள். அவ்வளவு தான் மக்மல் பூரி. இதற்கு Old sweet in new wrapper எனப் பெயர்.

ஆனால் நாம் பால்கோவா பயன்படுத்தப் போகிறோம். இதற்குப் பாம்பே ரசப் பூரி என மற்றொரு பெயரும் உண்டு. இப்படி பெயர் வைத்தால் எளிதில் விற்றுவிடும் என நம்பியுள்ளனர்.

sweet poori

மக்மல் பூரி செய்யத் தேவையானவை 

  • மைதா மாவு 
  • பேக்கிங் பவுடர்
  • தயிர் 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • பால்கோவா
  • தண்ணீர் 
  • சர்க்கரை 
  • உலர் பழங்கள்
  • சர்க்கரை பாகு 
  • நிறமி 
  • கடலெண்ணெய் 
  • தேங்காய் 

மேலும் படிங்க ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயிறு தோசை செய்முறை

மக்மல் பூரி செய்முறை 

  • ஒரு பாத்திரத்தில் 200 மைதா மாவு எடுத்துக் கொண்டு அதில் அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்க்கவும்
  • இதனுடன் மூன்று ஸ்பூன் தயிர் சேர்க்கவும், ஒரு சிட்டிகை உப்பும் சேர்க்கவும்
  • இதைச் சோளா பூரி, சப்பாத்தி மாவு, பரோட்டா மாவு போல மிக்ஸ் செய்யவும். தேவைக்கு ஏற்பத் தண்ணீரும் சேருங்கள். 
  • நன்றாகப் பிணைந்த பிறகு கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றித் துணியை வைத்து மூடிவிடுங்கள். 15 நிமிடங்களுக்கு அதை தொந்தரவு செய்ய வேண்டாம்
  • அடுத்ததாகக் கடாயில் தண்ணீர் ஊற்றி அதனுடன் 100 கிராம் சர்க்கரை சேர்க்கவும்.
  • ஒரு கம்பி பதம் வரும் வரை சூடுபடுத்தவும்.
  • தற்போது 200 கிராம் பால்கோவாவை அதில் சேர்க்கவும். சுவீட் நன்றாக ஒருங்கிணைய வேண்டும். இதோடு தேவையான அளவு உலர் பழங்கள் சேர்த்து அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள்.
  • இதன் பிறகு பூரியை வறுத்துச் சர்க்கரை பாகில் சேர்க்க சர்க்கரை பாகு தயாரிக்க போகிறோம்.
  • கடாயில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அரை கிலோ கொட்டி கரைக்கவும். ஒரு கம்பி பதம் வரும் வரை சூடுபடுத்தவும். அதாவது குலாப் ஜாமூன் ஜீரா போல
  • இதில் இறுதியாகக் கேசரிக்கு பயன்படுத்தப்படும் நிறமியைச் சேர்க்கவும். 
  • அவ்வளவு தான் சர்க்கரை பாகு தயாராகிவிட்டது.
  • இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு பிணைந்து வைத்த மாவில் இருந்து பூரி சைஸிற்கு உருட்டவும். 
  • அடுத்ததாகப் பூரி போல் எண்ணெய்-ல் போட்டு வறுத்து எடுக்கவும். அப்படியே சர்க்கரை பாகில் மூழ்கச் செய்யுங்கள்.
  • ஐந்து நிமிடங்களுக்குப் பூரி சர்க்கரை பாகில் ஊறிய பிறகு இனிப்பூட்டப்பட்ட பால்கோவாவை ஸ்பூன் கொண்டு பூரி மீது உங்களுக்குப் பிடித்தமான அளவிற்கு தடவவும்
  • பூரியை பாதியாக மடித்து நிறமி சேர்க்கப்பட்ட தேங்காய், நட்ஸ் தெளித்தால் தித்திக்கும் மக்மல் பூரி ரெடி. 

மேலும் படிங்க பேச்சுலர்களுக்கான ஸ்பெஷல் பன்னீர் புர்ஜி பிரியாணி

இது அதிக கலோரி கொண்டது அதனால் மாதம் ஒரு முறை செய்து சாப்பிடுங்கள். 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com