கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சுவையான வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் செய்வது எப்படி?

என்னதான் கடைகளில் கேக் வாங்கினாலும் நம் வீட்டில் நாம் செய்யும் கேக் சுவையே தனி. அந்த வரிசையில் எளிதில் செய்யக்கூடிய சுவையான வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் ரெசிபியை இங்கு பார்ப்போம்.
image

கிறிஸ்துமஸ் என்று கூறும்போது நம்மில் பலருக்கும் முதலில் நினைவில் வருவது கேக். இந்த கிறிஸ்துமஸ் சீசனில் மட்டும் பிளம் கேக் மிகவும் பிரபலம். ஒரு சிலர் வீட்டிலேயே கேக் செய்து கிறிஸ்துமஸை கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் நேரம் இல்லாத காரணத்தினால் வெளியில் கடையில் வாங்கி கேக் வெட்டி கொண்டாடுவது உண்டு. கிறிஸ்துமஸ்க்கு பிளம் கேக் மட்டும் இல்லாமல் வெண்ணிலா கேக் கூட செய்து பண்டிகையை கொண்டாடலாம். என்னதான் கடைகளில் கேக் வாங்கினாலும் நம் வீட்டில் நாம் செய்யும் கேக் சுவையே தனி. அந்த வரிசையில் எளிதில் செய்யக்கூடிய சுவையான வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் ரெசிபியை இங்கு பார்ப்போம்.

சுவையான வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் செய்ய தேவையான பொருட்கள்:

  • மைதா அரை கப்
  • முட்டை 2
  • வெண்ணிலா எசன்ஸ் ரெண்டு டேபிள் ஸ்பூன்
  • பொடித்த சர்க்கரை அரை கப்
  • பேக்கிங் பவுடர் அரை டேபிள் ஸ்பூன்
  • பேக்கிங் சோடா 1/8 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
  • பால் 1/4 கப்

சுவையான வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் செய்முறை:



முதலில் ஒரு பெரிய சல்லடை எடுத்துக் கொள்ளுங்கள், இப்போது இதை ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் தேவையான அளவு மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து நன்றாக சலித்து எடுக்க வேண்டும். இப்போது மற்றொரு பாத்திரத்தில் இரண்டு முட்டையை சேர்த்து அதை நன்றாக பீட் செய்ய வேண்டும். இப்போது முட்டையில் லேசாக நுரை வரும்போது நாம் அரைத்து வைத்த சர்க்கரையை சேர்த்து நல்ல கிரீம் பதத்தில் திரும்பவும் பீட் செய்ய வேண்டும். இதற்கு எலக்ட்ரிக் பீட்டர் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் வசதிக்கேற்ப நார்மல் பீட்டர் கூட பயன்படுத்தலாம். நன்றாக பீட் செய்தவுடன் அந்த கலவையில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் பீட் செய்யவும்.

20190805_144405-1024x768

இப்போது இதில் தேவையான அளவு பாலும் எண்ணெயும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை ஒன்றாக கலந்த பிறகு நாம் சலித்து வைத்த மைதா மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக கலந்து விட வேண்டும். இதனை கலந்து விட கட் அண்ட் போல்ட் மெத்தடில் மெதுவாக கலக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து ஒரு கேக் பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி தனியாக வைத்து கொள்ளுங்கள். இதற்கு பிறகு அவனை 2 நிமிடம் பிரீஹீட் செய்து கொள்ள வேண்டும். அவன் ப்ரீஹிட் ஆன பிறகு அந்த கேக் ட்ரேயில் இந்த மாவு கலவையை ஊற்றி 160 டிகிரி செல்சியஸ் 30 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.

vanilla-sponge-cake

30 நிமிடங்கள் கழித்து ஒரு குச்சி வைத்து இதை குத்தி பார்த்தால் மாவு குச்சியில் ஒட்டாமல் வெளி வந்தால் கேக் நன்றாக வெந்து விட்டதாக அர்த்தம். ஒருவேளை கேக் வேகவில்லை என்றால் அதே 160 டிகிரி செல்சியஸில் 5 நிமிடம் அல்லது பத்து நிமிடம் வரை வைத்து பேக் செய்யலாம். இப்போது கேக் வெந்து வந்த பிறகு அதை வெளியே எடுத்து வைத்து சூடு ஆறியதும் உங்கள் விருப்பம் படி எந்த வடிவில் வேணாலும் வெட்டிக் கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் தயார். இதை சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும். நாம் கடைகளில் வாங்குவது போலவே சுவையும் மிக அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த வெண்ணிலா கேக்கை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வருட கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு இந்த வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்கை வீட்டில் செய்து அசத்துங்கள்.

Image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP