herzindagi
spicy chettinad pepper chicken

நாக்குக்கு ருசியாக செட்டிநாடு பெப்பர் சிக்கன் மசாலா! செம ருசி...

அசைவ உணவு இன்றி ஞாயிற்றுக்கிழமையை கடத்துவதா ? செட்டிநாடு சிக்கன் மிளகு மசாலா ரெசிபி தெரிந்து கொண்டு ஒரு புடி பிடிக்கவும்.
Editorial
Updated:- 2024-06-22, 19:54 IST

செட்டிநாடு சமையல் என்றாலே உணவுகள் மசாலா சேர்க்கப்பட்டு நாக்கிற்கு ருசியாக காரசாரமாக இருக்கும். வார விடுமுறையில் குடும்பத்தினரை மகிழ்விக்கும் விதமாக அருமையான செட்டிநாடு ரெசிபி ஒன்றைப் பார்க்கலாம். ப்ரெஷ் ஆக மசாலா அரைத்து செட்டிநாடு சிக்கன் மிளகு மசாலா செய்யப் போகிறோம். இது காரசாரமாக சூப்பரா இருக்கும்.

Pepper Chicken

செட்டிநாடு சிக்கன் மிளகு மசாலா செய்யத் தேவையானவை

  • எலும்பு இல்லா சிக்கன்
  • முழு தனியா
  • சீரகம்
  • சோம்பு
  • மிளகு 
  • காய்ந்த மிளகாய்
  • எண்ணெய் 
  • பட்டை
  • ஏலக்காய்
  • கிராம்பு
  • வெங்காயம்
  • இஞ்சி பூண்டு
  • தக்காளி
  • மஞ்சள் தூள்
  • கறிவேப்பிலை
  • உப்பு

செட்டிநாடு சிக்கன் மிளகு மசாலா செய்முறை

  • முதலில் செட்டிநாடு சிக்கனுக்கான மசாலா தயாரிக்க எண்ணெய் இல்லாமல் சில பொருட்களை வறுக்கலாம்
  • பேனில் ஐந்து ஸ்பூன் முழு தனியா போட்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் சோம்பு, ஐந்து ஸ்பூன் மிளகு, இரண்டு காய்ந்த மிளகாய் சேர்க்கவும்
  • மிதமான தீயில் மூன்று நிமிடத்திற்கு இவற்றை வறுக்கவும். மசாலா வாசம் வந்தவுடன் ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்
  • இதை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைக்கவும்
  • இப்போது கடாயில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு துண்டு பட்டை, ஐந்து கிராம்பு, மூன்று ஏலக்காய், நான்கு பெரிய வெங்காயம் பொடிதாக நறுக்கி சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
  • வெங்காயம் வதங்குவதற்கு உப்பு சேர்க்கலாம் அல்லது தவிர்க்கலாம். உங்கள் விருப்பம்
  • வெங்காயம் நன்கு பொன்னிறத்திற்கு வதங்கியவுடன் இரண்டு இஞ்சி - பூண்டு தட்டிப் போடவும். இஞ்சி - பூண்டு பேஸ்ட் இருந்தால் ஒரு டீஸ்பூன் பயன்படுத்தவும்
  • இதனுடன் மூன்று தக்காளியை பொடிதாக நறுக்கி போடவும்
  • தக்காளி மசிந்து பச்சை வாசனை போன பிறகு அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  • ஒரு கிலோ எலும்பு இல்லாத சிக்கன் சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலந்து விட்டு சிக்கனை வேக வைக்க அரை லிட்டர் தண்ணீர் ஊற்றவும்
  • மிதமான தீயில் 15 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இப்போது அரைத்த வைத்திருக்கும் மசாலாவில் இருந்து ஐந்து டீஸ்பூன் சேர்க்கவும்.
  • கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து விட்டு கடாயை மூடி விடுங்கள்
  • பத்து நிமிடங்களுக்கு சிக்கன் நன்கு வேகட்டும். செட்டிநாடு சிக்கன் பெப்பர் மசாலா ரெடி. சூடாக பரிமாறவும்.
  • ரசம் சாதத்துடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

மேலும் படிங்க செம ருசியான செட்டிநாடு கார குழிப்பணியாரம் ரெசிபி

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள். செட்டிநாடு கார பணியாரம் ரெசிபியை படித்த வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com