herzindagi
chettinad kuzhi paniyaram recipe

அட டே! செம ருசியான செட்டிநாடு கார குழிப்பணியாரம் ரெசிபி

மாலை நேரத்தில் சூடான டீ உடன் சாப்பிடுவதற்கு உகந்த சிற்றுண்டு என்றால் அது கார குழிப்பணியாரம் தான். மாவு ரெடியாக இருந்தால் போதும் அரைமணி நேரத்தில் கார பணியாரம் ரெடி.
Editorial
Updated:- 2024-05-30, 18:16 IST

செட்டிநாடு சமையல் அசைவ உணவுகளுக்கு பெயர் பெற்றது என்றாலும் பிரபலமான சைவ சிற்றுண்டிகளும் இதில் இருக்கின்றன. குறிப்பாக செட்டிநாடு கார குழிப்பணியாரம். இதை தக்காளி அல்லது இஞ்சி சட்னியுடன் தொட்டு சாப்பிட மிக ருசியாக இருக்கும். இதன் செய்முறை எளிதே. சென்னை உட்பட பல நகரங்களில் சாலையோரங்களில் மூதாட்டிகள் சின்ன கடை போட்டு குழிப்பணியாரம் செய்வதை பார்த்திருப்போம். பணியாரம் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மை கிடைத்துவிடும் என நினைக்க வேண்டாம். இதில் ஆரோக்கியத்திற்கான பல விஷயங்கள் இருக்கின்றன. வாருங்கள் கார குழிப்பணியாரம் ருசிக்கலாம்.

how to make soft kuzhi paniyaram

கார குழிப்பணியாரம் செய்யத் தேவையானவை

  • பச்சரிசி 
  • புழுங்கல் அரிசி
  • உளுந்து பருப்பு
  • உப்பு
  • கடலெண்ணெய் 
  • கடுகு
  • இஞ்சி 
  • கறிவேப்பிலை
  • துருவிய தேங்காய்

மேலும் படிங்க உடல் எடையைக் குறைக்க கர்நாடகா ஸ்பெஷல் சோள ரொட்டி சாப்பிடுங்க!

  1. மாவு அளவு - தலா ஒரு கப் பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து. இவை மூன்றையும் தண்ணீரில் நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. அதன் பிறகு இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எட்டு மணி நேரத்திற்கு புளிக்க வைக்கவும். தேவையான அளவு உப்பு போடுங்கள்.

கார குழிப்பணியாரம் செய்முறை

  • கார குழிப்பணியாரத்தில் நாம் சேர்க்கும் மசாலா எப்போதுமே முக்கியம். மசாலா சேர்க்காமல் கார பணியாரம் செய்தால் இட்லி போல இருக்கும்.
  • இதற்கு அடுப்பில் கடாய் வைத்து கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, இரண்டரை ஸ்பூன் பச்சை மிளகாய், ஒன்றரை டீஸ்பூன் இஞ்சி, கொஞ்சம் கறிவேப்பிலை மற்றும் இரண்டு பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கி சேர்க்கவும்.
  • அனைத்தையும் ஒரு சேர கலந்து வதக்கிய பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு அரை மூடி துருவிய தேங்காய் போடுங்கள். கடாய் இருக்கும் சூட்டிலேயே தேங்காய் மிக்ஸ் ஆகி விடும். இரண்டு நிமிடத்திற்கு நன்கு கலந்துவிடுங்கள்.
  • இதை பணியாரத்தில் போட்டால் கார குழிப்பணியார மாவு தயார்.
  • இப்போது குழிப்பணியார பாத்திரத்தில் கொஞ்சமாக கடலெண்ணெய் தேய்த்து 80 ஒவ்வொரு குழியிலும் 80 விழுக்காடு அளவிற்கு பணியார மாவை நிரப்பவும்.
  • மிதமான சூட்டில் பணியாரம் சுடவும். தீ அதிகமாக வைத்தால் பணியாரம் வெளியே வேகும். உள்ளே மாவு அப்படியே இருக்கும்.
  • இரண்டு நிமிடத்திற்கு மூடி விடுங்கள். இப்போது ஒரு குச்சியில் பணியாரத்தின் ஓரத்தில் குத்தி திருப்பவும். வட்ட வடிவில் பணியாரம் சுடுவதற்கு இதுவே சரியான வழி.
  • குச்சியை பணியாரத்தின் நடுவே குத்தி மாவு ஒட்டாமல் வந்தால் கார குழிப்பணியாரம் ரெடி.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com