
Winter Diet: குளிர்காலம் ஆரம்பித்ததும் நம்முடைய உடல் பலவிதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பருவநிலை மாற்றத்தால் வரும் காய்ச்சல், சளி மற்றும் தொற்று நோய்களில் இருந்து தற்காத்து கொள்வதற்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம்.
சுவையான பழங்களை சுவைத்து மகிழ்வதற்கும், அதே சமயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சுறுசுறுப்புடன் இருப்பதற்கும் குளிர்காலம் ஒரு சரியான பருவம். வைட்டமின்கள், அன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இந்த பழங்கள், குளிரை எதிர்த்து போராடவும், உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பெரிதும் உதவுகின்றன. இந்த ஆரோக்கியமான பழங்கள் எவை, அவற்றின் பலன்கள் என்னென்ன என்று இதில் விரிவாக பார்க்கலாம்.
குளிர்காலத்தில் எளிதாக கிடைக்கும் பழங்களில் ஆரஞ்சு முதன்மையானது. இது வைட்டமின் சி-யின் களஞ்சியமாகும். வைட்டமின் சி , நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆரஞ்சு பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குளிர்காலத்தில் சுறுசுறுப்புடன் இருக்க உதவுகிறது. இதனை தினமும் சிற்றுண்டியாக சாப்பிடலாம் அல்லது சாறு எடுத்து அருந்தலாம்.

மேலும் படிக்க: Winter diet: குளிர்காலத்தின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்
தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்களுடன், கனிமச்சத்தையும் அதிகம் கொண்டுள்ள பழமாக மாதுளை விளங்குகிறது. அன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இரும்புச்சத்து இதில் நிறைந்துள்ளது. மாதுளை, நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், குளிர்காலம் முழுவதும் உங்கள் ஆற்றல் அளவை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.
'தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை தவிர்க்கலாம்' என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆப்பிள் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு பழமாகும். இதில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. ஆப்பிள்கள் செரிமானத்திற்கு உதவுகின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மேலும், இது வயிறை நிரப்பும் ஆரோக்கியமான குளிர்கால சிற்றுண்டியாக அமைகிறது.

இனிமையான சுவையுடன் கிடைக்கும் இந்த திராட்சை பழங்கள், ஊட்டச்சத்துகளிலும் முதன்மையாக உள்ளன. இதில் அன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இயற்கையான சர்க்கரைகள் அதிகம் நிறைந்துள்ளன. திராட்சை பழம் ஆற்றலை அதிகரிக்கும். இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், இவை குளிர்கால நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்க உதவுகின்றன.
மேலும் படிக்க: Winter Health Tips: குளிர்காலத்தில் உங்கள் உடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் 6 உணவுகள் இதோ
சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும் கிவி பழம், குளிர்கால உணவுக்கு ஏற்றது. கிவி பழம் வைட்டமின் சி-யின் ஒரு ஆற்றல் மையமாகும். ஆரஞ்சை விட அதிக வைட்டமின் சி இதில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும், குளிர்காலத்தில் உங்களை புத்துணர்ச்சியுடனும், ஊட்டச்சத்துடனும் வைத்திருக்க இது உதவுகிறது.
பப்பாளி வருடம் முழுவதும் கிடைத்தாலும், குளிர்காலத்தில் இதன் நன்மைகள் அதிகம். வைட்டமின்கள் ஏ, சி மற்றும் செரிமான நொதிகள் இதில் நிறைந்துள்ளன. பப்பாளி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனால் குளிர்கால ஆரோக்கியத்திற்கு இது உறுதுணையாக இருக்கிறது. மேலும், இதில் உள்ள பப்பாயின் (Papain) என்ற நொதி செரிமானத்திற்கு உதவுகிறது.
குளிர் காலத்தில் நமது உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய அதிக ஆற்றலை செலவிடுகிறது. இந்த சூழலில், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்களை உட்கொள்வது பல வழிகளில் உதவும்.
இந்த 6 பழங்களையும் உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு, இந்த குளிர்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com