herzindagi
muslim style bhai veetu biryani masala

Home Made Biryani Masala : பாய் வீட்டு பிரியாணியோட சீக்ரெட் பிரியாணி மசாலா ரெசிபி

ரம்ஜான் பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் பிரியாணி சாப்பிட காத்துகொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் சிறப்பு வணக்கம்…
Editorial
Updated:- 2023-04-17, 10:13 IST

உணவுக்கும், நட்புக்கும் மதம் ஒரு தடை அல்ல. உங்களுக்கு முஸ்லீம் நண்பர்கள் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாளிகள் தான். சமையல் அறைக்கு குட்பை சொல்லிவிட்டு சுட சுட வரும் பிரியாணிக்காக மணிகணக்காக காத்திருப்பதும் ஒரு சுகம் தான். மதிய உணவு, இரவு உணவுக்கு மட்டுமல்ல அன்றைய நாளின் சிற்றுண்டியும் பிரியாணி தான்.

இப்படி தனக்கென ஒரு தனி சுவையை கொண்டிருக்கும் இந்த பாய் வீட்டு பிரியாணியில் அப்படி என்ன ஸ்பெஷல்? ஒரு புறம் கை பக்குவம் இருந்தாலும், பிரியாணிக்கு என தனி மணத்தையும், சுவையையும் கொடுப்பது அவர்கள் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தும் அந்த பிரியாணி மசாலா தான். இதற்கான ரெசிபியை இன்று இப்பதிவில் பார்க்கப் போகிறோம். இனி நீங்களும் வீட்டிலேயே பாய் வீட்டு பிரியாணியை சுலபமாக செய்திடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நீர்க்கட்டி பிரச்சனையுள்ள பெண்களுக்கான ஸ்மூத்தி ரெசிபி

தேவையான பொருட்கள்

bai veetu biryani masala

  • காய்ந்த மிளகாய் - 3
  • பிரியாணி இலை - 7
  • தனியா - 2 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
  • ஷா ஜீரா - 1 டீஸ்பூன்
  • ஜாவித்ரி - 3
  • இலவங்கப்பட்டை - 2 அங்குலம் அளவு
  • ஜாதிக்காய் - 1
  • கிராம்பு - 1 டீஸ்பூன்
  • கருப்பு ஏலக்காய் - 3
  • நட்சத்திர சோம்பு - 3
  • ஏலக்காய் - 10
  • மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - ½ டீஸ்பூன்

செய்முறை

bai veetu biryani masala powder recipe

பின்வரும் மசாலாக்களை வறுப்பதற்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டாம். இதில் கூறப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றி மசாலாக்களை தனித்தனியாக வறுக்கவும்.

  • முதலில் ஒரு அடி கனமான கடாயில் காய்ந்த மிளகாய் மற்றும் பிரியாணி இலைகளை சேர்த்து மொறுகலாக மாறும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.
  • அடுத்ததாக தனியா, சீரகம் மற்றும் ஷா ஜீரா சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். இதையும் தனியாக வைக்கவும்.
  • இப்போது ஜாவித்திரி, பட்டை, ஜாதிக்காய், கிராம்பு, ஏலக்காய், கருப்பு ஏலக்காய், சோம்பு மிளகு மற்றும் நட்சத்திர சோம்பு சேர்த்து வறுக்கவும்.
  • வறுத்த மசாலாக்கள் அனைத்தும் நன்கு ஆறும் வரை காத்திருக்கவும்.
  • அதன்பின் இவற்றை எல்லாம் ஒரு மிக்சர் ஜாருக்கு மாற்றி நல்ல பொடியாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைத்து ஆறவிடவும்.
  • இந்த மசாலாவை காற்று புகாத ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இந்த மசாலாவை கொண்டு சைவம் மற்றும் அசைவ பிரியாணி வகைகளை செய்யலாம். இந்த அருமையான பாய் வீட்டு சீக்ரெட் பிரியாணி மசாலா பொடியை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: எண்ணெய் சேர்க்காத ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சென்னா மசாலா ரெசிபி

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com