ஆந்திரா ஸ்பெஷல் சுரக்காய் தயிர் பச்சடி செய்முறை

ஆந்திரா சமையலில் வீடுகளில் தயாரிக்கப்படும் சுரக்காய் தயிர் பச்சடி செய்முறையை இந்த பதிவில் பார்க்கலாம். குறைந்த பொருட்களை கொண்டு அரை மணி நேரத்தில் இதை தயாரித்து ருசிக்க முடியும்.
image

சுரக்காய் தயிர் பச்சடி என்பது ஆந்திராவில் சுரக்காய், தயிர், மசாலா பொருட்களை கொண்டு செய்யக்கூடிய அருமையான சைட் டிஷ் ஆகும். ஆந்திரா மக்கள் தினந்தோறும் சுரக்காயை ஏதாவது ஒரு விதத்தில் சேர்த்து கொள்வர். சாதம் மற்றும் சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட சுரக்காய் தயிர் பச்சடி நன்றாக இருக்கும். சிலர் சுரக்காய் வைத்து சட்னி கூட தயாரிக்கின்றனர். காரத்திற்கு ஏற்ப விரும்பினால் பச்சை மிளகாய் சேர்க்கலாம். தமிழகத்தில் சுரக்காயை வேக வைத்து பருப்பு போட்டு தாளித்து சுரக்காய் கூட்டு சாப்பிட்டு இருப்போம். இந்த சுரக்காய் தயிர் பச்சடி சற்று வித்தியாசமானது. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

sorakaya perugu pachadi

சுரக்காய் தயிர் பச்சடி செய்ய தேவையானவை

  • சுரக்காய்
  • தயிர்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • காய்ந்த மிளகாய்
  • கடுகு உளுந்து பருப்பு
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • பெருங்காயம்
  • நல்லெண்ணெய்
  • சீரகம்

சுரக்காய் தயிர் பச்சடி செய்முறை

  • முதலில் 300 கிராம் சுரக்காயை தோல் நீக்கி தண்ணீரில் நன்கு கழுவுங்கள். சுரக்காயின் தோல் கொஞ்சம் கசப்பானது. இதையடுத்து பேனில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் சுரக்காயை வேக வைக்கவும். முத்தலான சுரக்காயை பயன்படுத்த வேண்டாம்.
  • கடாயில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு வறுக்கவும். அடுத்ததாக வேக வைத்த சுரக்காயை போடுங்கள்.
  • ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். கொஞ்சமாக உப்பு போட்டால் சுரக்காய் விரைவாக வதங்கிவிடும். இதை தனியாக வைத்துவிடவும்.
  • அதே பேனில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு வரமிளகாய், ஒரு டீஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும்.
  • இதன் பிறகு ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேருங்கள். பச்சை வாசனை போன பிறகு கொஞ்சம் பெருங்காயத் தூள் போட்டு அடுப்பை ஆஃப் செய்து விடவும்.
  • இப்போது கால் லிட்டர் தயிரை எடுத்து அதில் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விஸ்க் வைத்து அடிக்கவும்.
  • இறுதியாக சுரக்காய், தாளித்த பொருட்களை தயிருடன் கலந்து விடுங்கள். அரைமணி நேரம் நன்கு ஊறட்டும்.
  • ஆந்திரா மீல்ஸில் வைக்கப்படும் சுரக்காய் தயிர் பச்சடியை வீட்டிலும் ருசிக்கலாம்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். எங்களை முகநூலில் பின்தொடர்வதற்கு Her Zindagi கிளிக் செய்யவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP