அளப்பரிய சுவையில் செட்டிநாடு ஸ்பெஷல் இறால் தொக்கு; இதுவே ரெசிபி

இறால் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. செட்டிநாடு சமையலில் இறால் தொக்கு மிக பிரபலம். இந்த ரெசிபியை பின்பற்றி செட்டிநாடு இறால் தொக்கு செய்து குடும்பத்தினருக்கு விருந்து அளித்து மகிழுங்கள்.
image

கடல் சார்ந்த உணவுகளில் மீனுக்கு அடுத்தப்படியாக அனைவரும் விரும்பும் உயிரினம் இறால். இதை விடுமுறை நாட்களில் செட்டிநாடு ஸ்டைலில் தொக்கு செய்து ருசி பார்த்தால் மெய் மறந்திடுவீர்கள். இந்த கட்டுரையில் பகிரப்படும் செய்முறை காரைக்கடி மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்டது. சுடு சோறோடு இரண்டு கரண்டு இறால் தொக்கு போட்டு பிசைந்து சாப்பிட்டால் ருசி வேற லெவலில் இருக்கும். செட்டிநாடு இறால் தொக்கிற்கு மசாலா செய்வது மிகவும் எளிது. இறாலை எவ்வளவு நேரம் வைக்க வேண்டும் என தெரிந்து கொண்டால் மாதம் நான்கு முறை இறால் தொக்கு சமைக்க தவறமாட்டீர்கள்.

prawn thokku

செட்டிநாடு இறால் தொக்கு செய்ய தேவையானவை

  • இறால்
  • பெரிய வெங்காயம்
  • சின்ன வெங்காயம்
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • காய்ந்த மிளகாய்
  • கடுகு
  • கொத்தமல்லி
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • பூண்டு
  • நல்லெண்ணெய்
  • முழு தனியா
  • மிளகு
  • சோம்பு
  • சீரகம்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • மல்லித் தூள்

செட்டிநாடு இறால் தொக்கு செய்முறை

  • செட்டிநாடு இறால் தொக்கு சமைத்திட முதலில் மசாலா தயாரிக்கலாம்.
  • கடாயில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு முழு தனியா ஒரு ஸ்பூன் போட்டு வறுக்கவும்.
  • அடுத்ததாக முக்கால் டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சோம்பு, 10 காய்ந்த மிளகாய், 20 கிராம் இடித்த இஞ்சி, 10 பல் பூண்டு, இரண்டு பெரிய வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் பாதி வதங்கிய பிறகு மூன்று தக்காளியை பொடிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் 4 பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், தலா முக்கால் ஸ்பூன் தனியா மற்றும் மிளகாய் தூள் போடவும்.
  • இதையடுத்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விட்டு மசாலாவை நன்கு வேக விடுங்கள்.
  • மசாலா கெட்டியானதும் ஒரு பத்தை தேங்காயை பொடிதாக நறுக்கி சேருங்கள். கொஞ்சம் கொத்தமல்லியும் கூட. ஒரு நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்துவிட்டு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல அரைக்கவும்.
  • அதே கடாயில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு ஸ்பூன் கடுகு போடுங்கள். கடுகு பொரிந்தவுடன் 10 பல் பூண்டு, 15 சின்ன வெங்காயம், அரை டீச்பூன் சோம்பு சேர்த்து வறுக்கவும்.
  • வெங்காயம் வதங்கிய பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், தலா அரை டீஸ்பூன் மல்லி தூள் மற்றும் தனியா தூள் சேர்க்கவும்.
  • ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடுங்கள். கொஞ்சம் கெட்டியான பிறகு மிக்ஸியில் அரைத்த மசாலாவை முழுமையாக போடுங்கள்.
  • பச்சை வாடை போன பிறகு ஒரு கிலோ இறாலை சுத்தப்படுத்தி சேருங்கள். உப்பு தேவையான அளவு போடவும்.

மேலும் படிங்கபாகற்காய் குழம்பை எல்லோரும் விரும்பி சாப்பிட இப்படி செஞ்சு கொடுங்க

  • இறால் குட்டியாக இருந்தால் 5-6 நிமிடங்களில் வெந்துவிடும்; மீடியம் சைஸில் இருந்தால் 8-10 நிமிடங்களில் வெந்துவிடும். அதற்கு மேல் வேக வைத்தால் மசாலா நன்றாக வரும். ஆனால் இறால் ரப்பர் போல் ஆகிவிடும்.
  • கடாயை மூடி இறாலை 4 நிமிடமும், திறந்த நிலையில் 4 நிமிடமும் வேக வைக்கவும். சூப்பரான செட்டிநாடு இறால் தொக்கு ரெடி.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP