
Glowing Skin Tips: சரும பராமரிப்பை பொறுத்தவரை, நமது சமையலறையில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்கள் பெரிய ஆச்சரியங்களை தரக்கூடியவை. அத்தகைய ஒரு மூலப்பொருள் தான் தயிர். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், ஒரு இயற்கையான ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலமாக செயல்பட்டு, சருமத்தை மென்மையாக மாற்றி, உள்ளிருந்து பளபளப்பை மீட்டெடுக்கிறது.
குறிப்பாக, குளிர்காலம் போன்ற வறண்ட காலங்களில் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தயிர் வழங்குகிறது. தயிரை வேறு சில இயற்கை பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சருமத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்றலாம். வீட்டில் எளிதாக தயாரிக்கக்கூடிய 5 சக்திவாய்ந்த தயிர் ஃபேஸ்பேக்குகளை பற்றி இதில் பார்க்கலாம்.
ஃபேஸ்பேக்குகளின் செய்முறையை பார்ப்பதற்கு முன், தயிர் சருமத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம்.
இந்த ஃபேஸ்பேக் சருமத்திற்கு ஆழமான நீரேற்றத்தை வழங்குவதில் சிறந்தது. தேனில் உள்ள ஈரப்பதம் தக்கவைக்கும் பண்புகள் சருமத்தை மென்மையாக்குகின்றன. தயிரின் லாக்டிக் அமிலம் சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது. இந்த கலவை உங்கள் முகத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், இயற்கையாக பொலிவுடனும் வைக்கிறது.

மேலும் படிக்க: Winter Skin Care Tips: குளிர்காலத்தில் உங்கள் சருமத்தின் பொலிவை தக்கவைக்க உதவும் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக் இதோ
மந்தமான சருமத்தை சரிசெய்ய இந்த ஃபேஸ் பேக் உதவுகிறது. தயிர் மற்றும் மஞ்சளின் கலவை மந்தத்தன்மையையும், நிறமாற்றத்தையும் குறைக்கிறது. இது இறந்த செல்களை உரித்தெடுப்பதன் மூலம் சருமத்தை ஒளிர செய்கிறது. மஞ்சளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருக்கள் வருவதை தடுக்க உதவுகிறது.
இது ஒரு சிறந்த இயற்கை ஸ்க்ரப் ஆகும். இந்தக் கலவையை முகத்தில் தடவி, மெதுவாக வட்ட இயக்கத்தில் தேய்த்து, பின்னர் உலர விடவும். இந்த ஸ்க்ரப், சரும துளைகளில் அடைத்துள்ள அழுக்குகளை நீக்குகிறது, அசுத்தங்களை அகற்றுகிறது மற்றும் இறந்த சரும செல்களை நீக்குகிறது. இதன் பயன்பாட்டிற்கு பிறகு மென்மையான, பிரகாசமான சருமம் வெளிப்படுகிறது.

கடுமையான மாசுபாடு காரணமாக பாதிக்கப்பட்ட சருமத்திற்கு இந்த ஃபேஸ் பேக் இதமான தீர்வாக செயல்படுகிறது. கற்றாழை, சருமத்தில் ஏற்படும் சிவத்தல் மற்றும் எரிச்சலை தணிக்கிறது. தயிர், நீரேற்றம் அளித்து இறந்த சரும செல்களை மெதுவாக உரித்தெடுக்கிறது. எனவே, இது சோர்வடைந்த சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கவும், அமைதிப்படுத்தவும் ஏற்றது.
மேலும் படிக்க: Coconut Oil for Skin: குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் உங்கள் சருமத்திற்கு கிடைக்கும் ஆரோக்கிய பயன்கள் என்னென்ன?
முகத்திற்கு இயற்கையான குளிர்ச்சியை அளிக்க இந்த ஃபேஸ் பேக் பெரிதும் பயன்படுகிறது. வெள்ளரிக்காயின் குளிர்ச்சியூட்டும் மற்றும் தணிக்கும் பண்புகள் சருமத்தை உடனடியாக புத்துணர்ச்சி பெறச் செய்கின்றன. தயிர் ஈரப்பதத்தை மீட்டெடுக்கிறது. உங்கள் முகத்தை மென்மையாகவும், பொலிவுடனும் மாற்ற இவை உதவுகிறது. வெயில் நேரத்தில் அதிகமாக வெளியே செல்பவர்களுக்கு இந்த ஃபேஸ்பேக் ஏற்றதாக இருக்கும்.
இந்த எளிய, இயற்கையான தயிர் ஃபேஸ்பேக்குகள் உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். இரசாயனம் அதிகம் உள்ள தயாரிப்புகளை தவிர்த்து, உங்கள் சமையலறை பொருட்களை பயன்படுத்தி இயற்கையான சரும பொலிவை பெறலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com