
உடல் சோர்வு, தலைசுற்றல் அல்லது நாள் முழுவதும் தூக்கம் வருவது போன்ற உணர்வு இருக்கிறதா? அப்படியானால் உங்கள் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கலாம். ஹீமோகுளோபின் என்பது நமது இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஒரு புரதம். இது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்து செல்கிறது. இதன் அளவு குறையும்போது, சோர்வு மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும் படிக்க: கை நடுக்கம் அதிகமாக இருக்கிறதா? வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்; அலட்சியப்படுத்த வேண்டாம்
அந்த வகையில், இயற்கையாகவே ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் சிறந்த அசைவ உணவுகளின் பட்டியலை இதில் காண்போம்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் ஆட்டிறைச்சி ஒரு சிறந்த உணவாகும். இதில் உடலால் எளிதில் உறிந்து கொள்ளப்படும் 'ஹீம் இரும்புச்சத்து' (heme iron) நிறைந்துள்ளது. 100 கிராம் சமைத்த ஆட்டிறைச்சியில் சுமார் 2.7 மி.கி இரும்புச்சத்து உள்ளது. இது உங்கள் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை விரைவுபடுத்த உதவும். இரும்புச்சத்து மட்டுமின்றி, வைட்டமின் பி12 மற்றும் சின்க் போன்ற சத்துகளும் இதில் உள்ளன. இவை ஆரோக்கியமான இரத்த உற்பத்திக்கு மிகவும் அவசியமானவை. எனவே, வாராந்திர உணவில் ஆட்டிறைச்சியை மிதமான அளவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு தேவையான ஆற்றலை தரும்.

ஆட்டிறைச்சிக்கு ஒரு சிறந்த மாற்றாக கோழி இறைச்சியை பயன்படுத்தலாம். 100 கிராம் சிக்கனில் சுமார் 1.3 மி.கி இரும்புச் சத்து மற்றும் புரதச்சத்து உள்ளது. குறிப்பாக, இது எளிதில் செரிமானம் ஆகும். அதிக கலோரிகள் இல்லாமல் சீரான இரும்புச் சத்தை பெற விரும்புவோருக்கு சிக்கன் ஒரு சிறந்த தேர்வாகும்.
மேலும் படிக்க: ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு சாப்பிட வேண்டும்? அதிக உப்பு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
முட்டை சிறியதாக இருந்தாலும், இரத்த ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை நிறைவாக கொண்டுள்ளது. ஒரு முட்டையில் சுமார் 1 மி.கி இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் பி12 போன்ற சத்துகள் உள்ளன. இந்த சத்துகள் அனைத்தும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு அத்தியாவசியமானவை. முட்டையின் மஞ்சள் கருவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. காலையில் அவித்த முட்டை, ஆம்லெட் அல்லது முட்டை கறி சாப்பிடுவது உங்கள் ஹீமோகுளோபின் அளவை நிலையாக வைத்திருக்க உதவும்.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க மீன் ஒரு சிறந்த உணவாகும். இது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களையும் வழங்குகிறது. சில மீன் வகைகளில் 100 கிராமுக்கு சுமார் 1-2 மி.கி இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்துடன், மீனில் வைட்டமின் டி மற்றும் புரதச்சத்தும் நிறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் ஏற்ற ஒரு உணவாகும். வாரத்திற்கு சில முறை மீன் சாப்பிடுவது ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துவதோடு, இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும்.
இறால், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் மற்றொரு சிறந்த கடல் உணவாகும். இதில் 100 கிராமுக்கு சுமார் 3 மி.கி இரும்புச்சத்து உள்ளது. அத்துடன், வைட்டமின் பி12 சத்தும் இதில் அதிகம் உள்ளது. இது நரம்பு மற்றும் ரத்த செயல்பாட்டை சீராக்குகிறது.
இந்த உணவுகளை சரியான முறையில் எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை சீராக மேம்படுத்த முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com