herzindagi
image

சூப்பரான கடலைமிட்டாய் ரெசிபி : இந்த 2 பொருள் இருந்தால் ஜமாய்ச்சிடலாம்

90ஸ் கிட்ஸிற்கு பிடித்தமான தின்பண்டங்களாக கடலை மிட்டாய், கோகோ மிட்டாயை கூறலாம். கடித்து சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். இதை நாம் பெரும்பாலும் கடைகளில் வாங்குகிறோம். ஆனால் இரண்டு பொருள் இருந்தால் கடலை மிட்டாய், கோகோ மிட்டாயை வீட்டிலேயே செய்யலாம்.
Editorial
Updated:- 2025-05-07, 15:55 IST

கடலை மிட்டாய், கோகோ மிட்டாய் என்றாலே எல்லோருக்கும் மதுரை கணேச விலாஸ் அல்லது கோவில்பட்டி கடலை மிட்டாய் நினைவுக்கு வரும். இந்த இடங்களில் கிடைக்கும் கடலை மிட்டாய் அவ்வளவு ருசியாக இருக்கும். ஊரில் இருந்து வரும் சொந்தக்காரர்கள் கடலை மிட்டாய், கோகோ மிட்டாய் வாங்கி வந்தால் உடனடியாக தீர்ந்துவிடும். இப்போது கோடை விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் எப்போதும் தின்பண்டங்களை கேட்பார்கள். ஒவ்வொரு முறை கடைக்கு சென்று வாங்குவதற்கு பதிலாக செய்முறையை தெரிந்து கொண்டால் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே கடலை மிட்டாய், கோகோ மிட்டாய் செய்யலாம். 90ஸ் கிட்ஸ் பள்ளிப் பருவத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு கடலை மிட்டாய் வாங்கி இருப்பீர்கள். இதை மீண்டும் ருசிக்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்முறை.

peanut chikki

கடலை மிட்டாய் செய்ய தேவையானவை

  • வேர்க்கடலை
  • வெல்லம்
  • ஏலக்காய்
  • தண்ணீர்
  • நெய்

கடலை மிட்டாய் செய்முறை 

  • நீங்கள் வறுத்த கடலை வாங்கி கடலை மிட்டாய் செய்யலாம் அல்லது பச்சை கடலை வாங்கி வறுத்து கடலை மிட்டாய் தயாரிக்கலாம்.
  • கடாயில் 150 கிராம் பச்சை கடலையை எடுத்து மிதமான தீயில் வறுக்கவும். இதை கடித்து சாப்பிடும் பதத்தில் வறுக்க வேண்டும். 
  • இப்போது அடுப்பில் இருந்து எடுத்து சூடு ஆறியவுடன் வேர்க்கடலை தோல் நீக்கவும். கருகிய கடலைகளை எடுத்துவிடவும்
  • அதே கடாயில் 150 கிராம் வெல்லம் போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை உருக்கவும். வெல்லம் உருகிய பிறகு அதை வடிகட்டுங்கள்.
  • கடாயில் மீண்டும் வெல்லத்தை ஊற்றி ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து வெல்ல பாகு தயாரிப்போம்.
  • பக்கத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக்கொண்டு வெல்லப் பாகினை அதில் போட்டு உடையும் பதத்தில் இருக்கிறதா என சரிபார்க்கவும்.
  • வெல்லப் பாகு தயாரானவுடன் வறுத்த வேர்க்கடலையை போட்டு கலக்கவும்.
  • ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் வேர்க்கடலை - வெல்லப் பாகு கலவையை போட்டு சப்பாத்தி கட்டையால் அழுத்தவும்.
  • முதலிலேயே கத்தியால் தேவைக்கு ஏற்ற அளவுகளில் வெட்டிவிடவும். தேவைப்பட்டால் நீங்கள் வெல்லத்தை எடுக்கும் போது ஏலக்காய் தூள் சேர்க்கலாம்.
  • அட்டகாசமான கடலை மிட்டாய் ரெடி.
  • கோகோ மிட்டாய் செய்வதற்கு நீங்கள் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக வெல்ல பாகில் சேர்த்து கலந்தால் போதுமானது. கோகோ மிட்டாய் தயாராகிவிடும். 

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com