herzindagi
aadi month special amman koozh recipe

ஆடி வெள்ளிகளில் அம்மனுக்கு படைக்கும் ஸ்பெஷல் கூழ் செய்வது எப்படி?

ஆடி மாதங்களில் அம்மன் கோவில்களில் தெய்வ வழிபாட்டோடு வழங்கப்படும் கூழ் எப்படி செய்வது என்பது உங்களுக்கு தெரியுமா? எளிய செய்முறை விளக்கம் இதில் விரிவாக உள்ளது.
Editorial
Updated:- 2024-07-19, 00:34 IST

உலகம் முழுவதும் தமிழ் மாதங்களுக்கு எப்போதும் கலாச்சாரம், பண்பாடு, மத வழிபாடு கலந்த பல்வேறு வரலாறு உள்ளது. தமிழ் நாட்காட்டியின் நான்காவது மாதமான ஆடி மாதம் அம்மனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி மாதம் வெகு விமர்சையாக கோலாகலமாக கொண்டாடப்படும். காளிகாம்பாள், மாரியம்மன், பராசக்தி அம்மன் மற்றும் பத்ரகாளி போன்ற தெய்வங்களை வழிபடும் பிரமாண்டமான கொண்டாட்ட காலமாகும்.

மேலும் படிக்க: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிரபலமான சுரைக்காய் லட்டு செய்முறை இதோ!

ஆடிமாத அம்மன் வழிபாடு 

aadi month special amman koozh recipe

அம்மன் கோவில்களில் திருவிழாவும் கேழ்வரகு கூழ் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்குவதும் தமிழ் கலாச்சார பாரம்பரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகம் முழுவதும் அனைத்து நகர் பகுதிகளிலும், கிராமங்களிலும் உள்ள அம்மன் கோவில்களில் இந்த ஆடி மாதம் விசேஷமாக கொண்டாடப்படும் அதில் குறிப்பாக, அம்மன் பிரசாதமாக பக்தர்களுக்கு கேழ்வரகு  கூழ் வழங்கும் பழக்கம் இருக்கிறது.

குழந்தைகளை பெரிதும் தாக்கும் அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான தமிழ் ஆண்டின் சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகின்ற ஆடி மாதத்தில் தான் அதிகமாக காணப்படும். குறிப்பாக இந்த ஆடி மாதத்தில் நிலவும் தட்ப வெப்பநிலை காரணமாக ஆடி மாதத்தில் காற்றின் வேகமும் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக பல்வேறு தொற்று நோய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரவும்.

அம்மன் கோவில் கூழ் வரலாறு 

aadi month special amman koozh recipe

இந்த ஆடி மாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தேவை என்பதால் இந்த நேரத்தில் கம்பு, கேழ்வரகு பயன்படுத்தி நமது முன்னோர்கள் கூழ்  செய்து அம்மன் கோவில்களில் திருவிழாக்களாக நடத்தி பக்தர்களுக்கு வழங்குவார்கள். ஏழை எளியோர் பசியை ஆற்றும் அரும்பெரும் மருந்தாக கூழ்  பார்க்கப்படுகிறது. கூழ், வேப்பிலை, மஞ்சள் நீர், சந்தனம், குங்குமம் வைத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் செய்யப்படுகிறது. இதனால் இந்த ஆடி மாதம் முழுவதும் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தி கேழ்வரகு கூழ் காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்குவார்கள்.

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று கஞ்சி கூழ். இந்த கூழ் உணவை கேழ்வரகு கம்பு உள்ளிட்ட தானியங்கள் கலந்து செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட ஆடி மாத அம்மன் ஸ்பெஷல் கூழ் செய்வது எப்படி என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

ஆடி மாத அம்மன் கூழ் செய்வது எப்படி?

aadi month special amman koozh recipe

தேவையான பொருட்கள்

  • 1 கப் ராகி மாவு
  • 1/4 கப் பச்சை அரிசி
  • சுமார் 2 கப் தண்ணீர் + தேவைக்கேற்ப
  • 1 கப் தயிர்
  • சிறிய வெங்காயம் 2 டீஸ்பூன் 
  • கறிவேப்பிலை 2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய்
  • சுவைக்கு உப்பு

கூழ் செய்முறை 

  1. ராகி மாவில் 4 கப் தண்ணீரைச் சேர்த்து, முழுமையாகக் கலந்து கட்டி இல்லாமல் கிளறவும். ஒதுக்கி வைக்கவும்.
  2. பச்சை அரிசியை மிக்ஸியில் எடுத்துக் கொள்ளவும். ரவா போல் கரடுமுரடான கலவையாக அரைக்கவும்.
  3. அடி கனமான பாத்திரத்தில், 2.5 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அரிசியைச் சேர்த்து, கஞ்சி போன்ற நிலைத்தன்மைக்கு மென்மையாக சமைக்கவும்.
  4. பிறகு கலந்து வைத்திருக்கும் ராகி மாவு கலவை மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.
  5. குறைந்த தீயில், அது கெட்டியாகும் வரை மற்றும் ராகி மாவு இலைகளின் பச்சை வாசனை வரும் வரை கலந்து சமைக்கவும். இது பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாறும்.
  6. இந்த கட்டத்தில், அதை அணைத்து, பரந்த வாய் கொள்கலனில் பரப்பி, அதை முழுமையாக குளிர்விக்க விடவும்.
  7. தயிரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். ஒதுக்கி வைக்கவும்.
  8. பச்சை மிளகாயை கரடுமுரடான விழுதாக அரைக்கவும்.
  9. இப்போது ராகி கூழில், மோர், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும்.
  10. கட்டிகள் இல்லாமல் நன்றாக அடிக்கவும்; ஒரு மெல்லிய கூழ் நிலைத்தன்மைக்கு தண்ணீர் சேர்க்கவும். இது மிகவும் சளியாக இருக்க வேண்டும்.
  11. வெங்காயம் மற்றும் மிளகாயுடன் ஆடி கூழ் பரிமாறவும்.

மேலும் படிக்க: ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் அக்காரவடிசல் சாப்பிட்டு இருக்கீங்களா ? அளப்பரிய சுவைக்கான ரெசிபி

இதுபோன்ற ஆரோக்கியமான உணவு முறை தகவல்களை தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் - HerZindagi Tamil

image source: google

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com