herzindagi
recipe with peas peel easy

பட்டாணியின் தோலை வைத்து இப்படியும் சமைக்கலாமா! இனி தோல்களை தூக்கி எறியாதீங்க!

பட்டாணியை மட்டும் பயன்படுத்திவிட்டு அதன் தோல்களை தூக்கி எறிகிறீர்களா? தோல்களையும் பயனுள்ளதாக மாற்றுவதற்கான வழிகளை பதிவில் காணலாம்...
Editorial
Updated:- 2023-07-05, 10:08 IST

பருவ கால காய்கறிகளுக்கு கூடுதல் சிறப்பு, ஏனெனில் இவற்றை சாப்பிட மீண்டும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். அந்த வகையில் ஃபிரஷாக கிடைக்கக்கூடிய பட்டாணியை வைத்து ஏராளமான பல அற்புத ரெசிபிகளை செய்யலாம். பட்டாணியின் சுவையும் அதன் நன்மைகளும் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் எப்போதாவது பட்டாணியின் தோலை சாப்பிட்டு இருக்கிறீர்களா? பட்டாணியை போலவே அதன் தோலும் சுவை நிறைந்தது. ஒரு சில இடங்களில் இதை காய்கறியாகவும் பரிமாறுகிறார்கள்.

இன்றைய பதிவில் பட்டாணியின் தோலை பயனுள்ளதாக மாற்றக்கூடிய எளிய ரெசிபியை பார்க்கப் போகிறோம் இனி பட்டாணியின் தோலை தூக்கி எறியாமல் அதை சுவையுள்ள உணவாக மாற்றிடுங்கள். பட்டாணியின் தோலை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து வறுவலாக செய்து கொடுக்கலாம். இதற்கான செய்முறையை இப்போது பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: சைவ நாட்களில், இது போல வெஜிடேரியன் மீன் வறுவல் செய்து அசத்துங்க!

 

தேவையான பொருட்கள்

pattani thol varual

  • பச்சைப் பட்டாணி தோல் 20-25 
  • உருளைக்கிழங்கு - 2
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • வெங்காயம் - 2
  • உப்பு - தேவையான அளவு 
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  • தக்காளி - 1
  • தனியா தூள் - 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

peas peel varuval

  • முதலில் பட்டாணியை உரித்து விட்டு அதன் தோலை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுத்ததாக தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும்.
  • இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • இதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
  • இப்போது மூடி போட்டு உருளைக்கிழங்கை முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்.
  • உருளைக்கிழங்கு வெந்த பிறகு இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
  • தக்காளி மசியும் பதத்திற்கு மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • கடைசியாக கொத்தமல்லி இலைகளை தூவி சாதத்துடன் பரிமாறலாம்.
  • இதைப்போலவே பட்டாணியின் தோலை வைத்து சூப், சட்னி போன்ற ரெசிபிகளையும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: உங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இப்படி பைனாப்பிள் ரசம் வெச்சு சாப்பிடுங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com