Pregnant women health tips: மழைக்காலம் புத்துணர்ச்சியையும் பசுமையையும் கொண்டு வந்தாலும், அது நோய் தொற்று அபாயத்தையும் அதிகரிக்கக் கூடும். கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருக்கலாம். கர்ப்ப காலத்தில், ஒரு பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தி சற்றுக் குறைவாக இருக்கும் என்பதால், இந்த பருவத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம். அந்த வகையில் கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான குறிப்புகளை தற்போது பார்க்கலாம்.
மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு கடினமாக இருக்கிறதா? பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய 5 அடிப்படை அம்சங்கள்
மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர், டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறுகிறது. எனவே, உங்கள் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். காய்ச்சல் மற்றும் வயிறு தொடர்பான நோய்களை தடுக்க, உணவு உண்பதற்கு முன்னும் பின்னும், கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவுவது அவசியம்.
இந்த பருவத்தில் உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். எண்ணெய் அதிகம் உள்ள, காரமான மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்கவும். ஏனெனில், அவை செரிமான கோளாறுகளை ஏற்படுத்தி, நோய்த்தொற்று அபாயத்தை அதிகரிக்கும். எப்போதும் வடிகட்டிய தண்ணீரைக் குடிக்கவும். வெளியிடங்களில் விற்கப்படும் உணவுகளை உண்பதை தவிர்க்கவும். தயிர் மற்றும் மோர் போன்ற புரோபயாடிக் உணவுகள், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மழைக் காலத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். எனவே, அசுத்தமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வெளியே செல்லும் போது சுத்தமான ஆடைகளை அணியுங்கள். நல்ல தரமான, வசதியான மாஸ்க் அணிந்து செல்லுங்கள். இந்த எளிய நடவடிக்கை நோய்த் தொற்றுகளை தவிர்க்க பெரிதும் உதவும்.
மேலும் படிக்க: Health tips for women: நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் பெண்களா நீங்கள்? அப்போ இந்த ஹெல்த் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
மழைநீர் மற்றும் திறந்த வடிகால்கள் பல்வேறு கிருமிகளை கொண்டு செல்லும். எனவே, தேங்கியுள்ள தண்ணீரில் நடப்பதை தவிர்க்கவும். மழையில் நனைவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில், ஈரமான ஆடைகள் நோய்த் தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.
காய்ச்சல், இருமல், உடல் வலி அல்லது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற அசாதாரண அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும். நோய்த் தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிக்க, வழக்கமான மகப்பேறு பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல்நலம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த போதுமான ஓய்வு எடுப்பதை உறுதி செய்யுங்கள்.
மழை காலங்களில் கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய இந்த வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவை தேவையற்ற சிக்கல்களை தடுக்க பெரும் உதவியாக இருக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com