
நமது உடல் சரியாக செயல்பட தேவைப்படும் சத்துகளில் மக்னீசியம் முக்கியமானதாகும். உடலில் நிகழும் உயிர்வேதியியல் செயல்பாடுகளில் இது பங்கு வகித்தாலும், இதன் முக்கியத்துவம் பல நேரங்களில் உணரப்படுவதில்லை. குறிப்பாக, பெண்கள் தங்கள் 50 வயதை எட்டும் போது, ஹார்மோன் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தீவிரமான மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த மாற்றங்கள் எலும்பு அடர்த்தி மற்றும் மனநிலை ஆகியவற்றை பாதிக்கின்றன. எனவே, இந்த காலகட்டத்தில் சரியான ஊட்டச்சத்துகளை பெறுவது அவசியமாகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மக்னீசியம் ஏன் மிகவும் முக்கியமானது என்பதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.
பெண்கள் மெனோபாஸ் (Menopause) பருவத்தை அடையும் போது, ஈஸ்ட்ரோஜன் (Estrogen) ஹார்மோனின் அளவு வெகுவாக குறைகிறது. இதன் விளைவாக, எலும்பு மற்றும் தசைகள் பாதிக்கப்படுகின்றன. இது ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) எனப்படும் எலும்பு வலுவிழக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கு அனைவரும் அறிந்த ஊட்டச்சத்து கால்சியம் என்றாலும், மக்னீசியமும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது. மக்னீசியம், கால்சியத்தை சமன் செய்ய உதவுகிறது. மக்னீசியம் பற்றாக்குறை ஏற்படும் போது, எலும்புகள் பலவீனமடைந்து, எலும்பு முறிவு அபாயம் அதிகரிக்கக்கூடும். பாதாம், கீரைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற மக்னீசியம் நிறைந்த உணவுகளை சேர்ப்பது எலும்பு அடர்த்தியை பராமரிக்க உதவும்.
மேலும் படிக்க: கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்? அவசியம் பின்பற்ற வேண்டிய 5 குறிப்புகள்
50 வயதுக்கு பிறகு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக பெண்களுக்கு இருதய நோய் அபாயம் அதிகரிக்கிறது. மக்னீசியம் இயற்கையாகவே இரத்த நாளங்களின் இறுக்கத்தை குறைத்து, இருதயத்தின் செயல்பாட்டை சீராக்கி, இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது. உங்களுக்கு அடிக்கடி இதயத் துடிப்பு அதிகரித்தல், தசைப்பிடிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் இருந்தால், உங்கள் உடலில் மக்னீசியம் குறைவாக இருக்கலாம்.

மேலும் படிக்க: நாவல் பழத்தின் நன்மைகள்: நீரிழிவு நோயாளிகளுக்கான முக்கிய குறிப்புகள்
மனநிலை மாற்றங்கள் போன்றவை மெனோபாஸின் பொதுவான அறிகுறிகள். இவை தூக்கம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். மக்னீசியம், செரோடோனின் மற்றும் மெலடோனின் போன்ற நரம்பு கடத்திகளை கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கிறது. இது பதற்றத்தை கணிசமாக குறைக்கவும், மனநிலையை நிலைப்படுத்தவும் உதவும்.
50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இடையே இரத்த ஓட்டம் குறைபாடு அல்லது எலக்ட்ரோலைட் சமநிலையின்மை காரணமாக தசைப்பிடிப்புகள் அடிக்கடி ஏற்படும். இதனை கட்டுப்படுத்த மக்னீசியம் உதவுகிறது. இரவு நேரங்களில் கால் பிடிப்பு ஏற்பட்டால், உங்கள் உணவில் மக்னீசியம் பற்றாக்குறை இருக்கலாம்.

வயது அதிகரிக்கும் போது வளர்சிதை மாற்றம் குறைவதால், டைப் 2 நீரிழிவு அபாயம் அதிகரிக்கிறது. மக்னீசியம், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுவதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவுகளை கட்டுப்படுத்துகிறது. நீண்டகால மக்னீசியம் பற்றாக்குறை உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றுடன் தொடர்புடையது. சரியான மக்னீசியம் அளவை பராமரிப்பது, எடையை கட்டுக்குள் வைக்கவும், நீரிழிவு அபாயத்தை குறைக்கவும் உதவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com