
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில் பலருக்கு ஆர்வம் உண்டு. இருப்பினும், வீட்டை சுத்தம் செய்யும் போது ஒரு முக்கியமான விஷயத்தை பலர் மறந்து விடுகிறார்கள். அதுதான் படுக்கை விரிப்பை (bedsheet) மாற்றுவது. படுக்கை விரிப்பில் கறைகள் இருந்தாலோ அல்லது அழுக்காக தோன்றினாலோ மட்டுமே அதை மாற்ற வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், சுகாதார நிபுணர்கள் இதை குறைந்தது வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.
மேலும் படிக்க: புதிய பாத்திரங்களில் இருந்து ஸ்டிக்கரை அகற்ற முடியவில்லையா? இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
நமது உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, இறந்த சரும செல்கள் போன்றவை தினமும் படுக்கை விரிப்பில் படிந்து விடுகின்றன. இவை கண்ணுக்கு தெரியாத கிருமிகள் மற்றும் பூஞ்சைகள் வளரும் இடமாக அமைகின்றன. இதனால் சருமத்தில் அரிப்பு, ஒவ்வாமை, தடிப்புகள் மற்றும் சுவாச நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கோடை காலத்தில் வியர்வை அதிகம் வருவதால், படுக்கை விரிப்பை மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது. இது பாக்டீரியாக்கள் வளர்வதை தடுக்கும். குளிர்காலத்தில் வியர்வை குறைவாக இருப்பதால், படுக்கை விரிப்புகள் சுத்தமாக இருப்பதாக பலர் கருதுகிறார்கள். ஆனால், எல்லா காலங்களிலும் இறந்த சரும செல்கள் உதிர்ந்து கொண்டே தான் இருக்கும். அவை பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு உணவாக அமைகின்றன. எனவே, படுக்கை விரிப்பை அடிக்கடி மாற்றாவிட்டால் நோய்த் தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
மேலும் படிக்க: உங்கள் வீட்டின் மின் கட்டணத்தை மிச்சப்படுத்த வேண்டுமா? இந்த எளிய குறிப்புகளை பின்பற்றினால் போதும்
வீட்டில் குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகள் இருந்தால், படுக்கை விரிப்பை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது. ஏனெனில், உணவுத் துணுக்குகள், செல்லப்பிராணிகளின் முடிகள் மற்றும் அழுக்குகள் படுக்கை விரிப்பில் எளிதாக படிந்து விடும். இது தவிர, ஆஸ்துமா, ஒவ்வாமை அல்லது சருமம் மிகவும் உணர்திறன் கொண்டவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக, படுக்கை விரிப்பை மாற்றுவது மட்டும் போதாது. அதை சரியாக சுத்தப்படுத்துவதும் முக்கியம்.

படுக்கை விரிப்பை கிருமிநாசினி திரவத்துடன் (antiseptic liquid) சேர்த்து வெந்நீரில் துவைக்க வேண்டும். இவ்வாறு துவைத்த படுக்கை விரிப்புகளை வெயிலில் உலர்த்துவது நல்லது. ஏனெனில், சூரிய ஒளி ஒரு சக்திவாய்ந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, படுக்கை விரிப்பில் ஒளிந்திருக்கும் கிருமிகளை அழித்துவிடும்.
படுக்கை விரிப்பை தொடர்ந்து மாற்றுவது மற்றும் சரியாக சுத்தம் செய்வது, நோய்த் தொற்றுகள் மற்றும் ஒவ்வாமையை தடுப்பதுடன், உங்கள் வீட்டை எப்போதும் சுகாதாரமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com