முதுகு வலி, தோள்பட்டை வலி, மூட்டு வலி, கழுத்து வலி போன்றவை உங்களுக்கு எப்போதும் இருக்கிறதா? நீங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக வேலை பார்ப்பவராக இருந்தால், அதிகப்படியான நேரத்தை உட்கார்ந்து கொண்டே செலவிடுகிறீர்கள் என்று அர்த்தம். அவ்வாறு செயல்பட்டால் இது போன்ற வலிகள் தவிர்க்க முடியாததாக மாறி விடும்.
மேலும் படிக்க: இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் தூக்கம்; நிம்மதியான உறக்கத்திற்கு உதவும் சிம்பிள் டிப்ஸ்
இன்றைய சூழலில் லட்சக்கணக்கான அலுவலக ஊழியர்கள் இது போன்ற பாதிப்புகளுடன் கடுமையாக போராடி வருகிறார்கள். இந்த வேலையை தக்கவைத்துக் கொண்டே எவ்வாறு ஆரோக்கியமாக செயல்படுவது என்று பலரும் குழப்பம் கொள்கின்றனர். அந்த வகையில், இந்த வேலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதலில் நாம் ஆராய வேண்டும்.
அதிக நேரம் உட்கார்ந்திருப்பது புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு சமமானது என்று கூறப்படுகிறது. இன்றைய பல வேலைகள் நீண்ட நேரம் உட்கார்ந்தே செய்ய வேண்டியவை. இதில் ஊழியர்கள் 10 முதல் 12 மணிநேரம் வரை தங்கள் இருக்கைகளில் அமர்ந்து இருக்கின்றனர். இது நீங்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு லாபகரமாக இருந்தாலும், உங்களுக்கு கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
நீங்கள் உடற்பயிற்சிகள் மேற்கொண்டாலும் கூட நீண்ட நேரம் அமர்ந்து இருந்தால் டைப் 2 நீரிழிவு நோய், வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனைகள், இருதய நோய் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள வேண்டுமானால், சில வகையான வாழ்வியல் மாற்றங்களை நீங்கள் மேற்கொள்வது அவசியம் ஆகும்.
ஏறத்தாழ 30 முதல் 60 நிமிடங்களுக்கு ஒரு முறை அலாரம் வைத்து, இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு நடக்க வேண்டும். இது தவிர 10 முறை ஸ்குவாட்ஸ் பயிற்சியை மேற்கொள்ளலாம். இப்படி செய்யும் போது இரத்த ஓட்டம் மேம்படும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வேலைக்காக அலுவலகத்திற்கு செல்லும் போது, மதிய உணவை வீட்டில் இருந்து தயாரித்து எடுத்துச் செல்லவும். இதன் மூலம் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்து சரியான அளவில் கிடைப்பதை உறுதி செய்யலாம். மேலும், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் அற்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க முடியும்.
பெரும்பாலும், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் போது தண்ணீர் தாகம் இருக்காது. ஆனால், அன்றைய தினத்திற்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்கள். இதற்காக உங்களுக்கு அருகில் எப்போதும் தண்ணீர் நிரப்பப்பட்ட பாட்டிலை வைத்திருக்கலாம்.
உங்களுடைய உடல் நலம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு மனநலமும் முக்கியம். மூச்சு பயிற்சி, தியானம் அல்லது உங்கள் மனதிற்கு நிம்மதி மற்றும் புத்துணர்வு அளிக்கக் கூடிய விஷயங்களை கண்டறிந்து அதற்காக நேரம் ஒதுக்குங்கள்.
இவை அனைத்தையும் தொடர்ச்சியாக பின்பற்றும் போது, உங்களுடைய ஆரோக்கியத்தை எளிதாக மேம்படுத்த முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com