கர்ப்ப காலம் என்பது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையைக் கொடுத்தாலும் கர்ப்பிணிகளுக்கு பெரும் சவாலானதாக அமையும். வயிற்றில் கரு வளரத் தொடங்கியதிலிருந்து 9 மாத காலம் வரை ஊட்டச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவதோடு முறையான தூக்கம், வாக்கிங் போன்ற அனைத்து விஷயங்களையும் முறையாக நடைமுறைப்படுத்துவார்கள். இந்நேரத்தில் பல சந்தேகங்கள் ஏற்படும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் நீர்ச்சத்துக்கள் குறையாமல் இருப்பதற்கு எத்தனை லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்? சூடான தண்ணீர் குடிக்கலாமா? என்ற சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு
மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் இரத்தம் குறைவாக உள்ளதா? அதிகரிப்பதற்கான சிம்பிள் டிப்ஸ்கள்
கருப்பையைச் சுற்றி அம்னோடிக் திரவம் உருவாகும். நீர்ச்சத்துக்கள் முறையாக இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், குழந்தைகளின் வளர்ச்சிக்கும் பேருதவியாக உள்ளது. எனவே தினமும் கட்டாயம் 2 முதல் 3 லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏதேனும் உடற்பயிற்சிகள் செய்தாலும், வெயில் காலமாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவை விட தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களுக்கு அதிக வாந்தி உணர்வு இருக்கும். இதனால் உடலில் நீர்ச்சத்துக்கள் குறையக்கூடும். உடல் ஆரோக்கியத்திற்காக சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலும் சாப்பாட்டை பார்த்தாலும் தண்ணீரைப் பார்த்தாலும் வாந்தி ஏற்படக்கூடும். எனவே இளநீர், பால், மோர், பழச்சாறுகள் போன்றவற்றைப் பருகுவது நல்லது.

மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் வாந்தியைக் கட்டுப்படுத்த இதைப் பின்பற்றுங்கள் போதும்
கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களுக்கு அதிக வாந்தி உணர்வு இருக்கும். இதனால் உடலில் நீர்ச்சத்துக்கள் குறையக்கூடும். உடல் ஆரோக்கியத்திற்காக சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலும் சாப்பாட்டை பார்த்தாலும் தண்ணீரைப் பார்த்தாலும் வாந்தி ஏற்படக்கூடும். எனவே இளநீர், பால், மோர், பழச்சாறுகள் போன்றவற்றைப் பருகுவது நல்லது.
கர்ப்ப காலத்தில் சூடான தண்ணீரைக் குடிக்கக்கூடாது. கொஞ்சம் வெதுவெதுப்பாக தண்ணீரைக் குடிப்பது நல்லது. ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரைக் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது சிறுநீர் தொற்று ஏற்படாது. 3 மாதங்களுக்குப் பிறகு உடலில் நீர்ச்சத்துக்கள் குறையக்கூடும் என்பதால் சரியாக நிர்வகிக்க அவ்வப்போது தண்ணீர் குடிப்பது நல்லது.
ஒருவேளை போதிய தண்ணீர் இல்லையென்றாலும் சிறுநீர் பாதை தொற்று, சிறுநீர் வீக்கம் போன்ற பாதிப்பு ஏற்படக்கூடும். இதைத் தவிர்ப்பதற்குக் கட்டாயம் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். எந்தளவிற்கு தண்ணீர் அதிகம் குடிக்கிறீர்களோ? கர்ப்ப காலம் முழுவதும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உதவியாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையென்றால் கர்ப்பிணிகளுக்குப் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அடிக்கடி தாகம் எடுத்தல், சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல், தொண்டை கரகரப்பு, தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற அறிகுறிகள் அனைத்தும் உடலில் நீர்ச்சத்துக்கள் குறைவதற்கான முக்கிய காரணமாக அமைகிறது.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com