குழந்தைகளை 10 மாதம் கருவில் சுமக்கும் தாய்மார்களின் மனம் எப்போதும் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் என்ன 7 மாதங்களைத் தொட்டவுடன் சொல்லக்கூடிய வார்த்தை அவர்களின் மனநிலையைக் கெடுத்துவிடும். அப்படி என்னான்னு கேட்கிறீங்களா? இரத்தம் குறைவாக உள்ளது.ஹுமோகுளோபின் அளவை அதிகரிக்க ஒன்னு இரத்தம் ஏற்ற வேண்டும் அல்லது வாரத்திற்கு மூன்று முறையாவது இரத்த ஊசி செலுத்த வேண்டும் என்பார்கள்.
7 மாதங்கள் ஆனவுடன் குழந்தைகளின் வளர்ச்சி தீவிரமாகும். இதனால் குழந்தைகளுக்கு அதிக இரத்தம் தேவைப்படும் என்பதால் சட்டென்று கர்ப்பிணிகளின் ஹுமோகுளோபின் அளவு குறையக்கூடும். இவற்றை அதிகரிக்க உணவு முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம். அவற்றில் சில உங்களுக்காக.
கர்ப்ப காலத்தில் ஹுமோகுளோபின் அளவை அதிகரிக்க தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம்.
புரோட்டின் மற்றும் அயர்ன் நிறைந்த முட்டையை கர்ப்பிணிகள் தினமும் சாப்பிட வேண்டும். இரத்தத்தின் அளவை அதிகரிப்பதோடு குழந்தையின் எடையையும் அதிகரிக்க செய்கிறது.
கர்ப்ப காலத்தில் குறையக்கூடும் ஹுமோகுளோபின் அளவை அதிகரிக்க அயர்ன் நிறைந்த முருங்கை இலையைக் கொண்டு பொரியல், முருங்கை சூப் செய்து சாப்பிடலாம்.
கர்ப்ப காலத்தில் முளைக்கட்டிய பயறு வகைகளைச் சாப்பிடலாம். குறிப்பாக வைட்டமின்கள் மற்றும் அயர்ன் நிறைந்த முளைக்கட்டிய பாசிப்பயறு கட்டாயம் சாப்பிட வேண்டும். இது இரத்த அளவை அதிகரிக்க செய்கிறது.
அசைவ உணவு சாப்பிடக்கூடிய கர்ப்பிணிகளாக இருந்தால் வாரத்திற்கு இருமுறை கட்டாயம் சுவரொட்டி அல்லது ஈரல் போன்றவற்றைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கர்ப்ப காலத்தில் குறையக்கூடிய இரத்தத்தின் அளவை சட்டென்று அதிகரிக்க உதவக்கூடும்.
கர்ப்ப காலத்தில் கட்டாயம் பச்சை இலை காய்கறிகளைக் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு மற்றும் மாதுளை போன்ற பழங்களைத் தினமும் ஜூஸாக செய்து சாப்பிடலாம். இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்கிறது.
கர்ப்ப காலத்தில் நட்ஸ்களை கர்ப்பிணிகள் அதிகம் சாப்பிடலாம். உடலை வலுவுடன் வைத்திருக்க உதவுகிறது. உடலின் இரத்த அளவை அதிகரிக்க வேண்டும் என்றால் உலர் திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.
மேலும் படிக்க : 30 வயதுக்கு பிறகு பெண்களுக்கு மாதவிடாய் குறைவது ஏன்? காரணம் மற்றும் வாழ்க்கை முறை என்ன?
இவ்வாறு உணவு முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து, கர்ப்ப காலத்தில் குறையக்கூடிய ஹூமோகுளோபின் அளவை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். கர்ப்பிணிகளுக்கு மட்டுமல்ல குழந்தைகள் எவ்வித பிரச்சனையும் இன்றி வளர்வதற்கு ஹுமோகுளோபின் பேருதவியாக இருக்கும்..
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com