குழந்தைப் பிறப்பு என்பது ஒவ்வொரு பெண்களும் அனுபவிக்கும் மகிழ்ச்சியான தருணம். தங்களுடைய குடும்பத்தில் புதிதாக வாரிசு ஒன்று வரப்போகிறது என்றால் யாருக்குத் தான் சந்தோஷம் இருக்காது. குடும்பத்தில் உள்ள அனைவரும் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். ஆனால் கர்ப்பிணிகளின் உடலும் மனமும் சோர்வாகிவிடும். அதிலும் முதல் மூன்று மாதங்களைக் கடப்பது என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் பெரும் சவால். தண்ணீர் குடித்தால் கூட வயிற்றில் தங்காமல் வாந்தி எடுக்க நேரிடும். இந்த சூழலைத் தவிர்ப்பதற்கு கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் வாந்தியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களில் ஏற்படக்கூடிய வாந்தியை ஹைப்பர் ஹமிசஸ் ( Hyperemesis Gravidarum) என்கிறோம். என்ன தான் மருத்துவரின் அறிவுரையின் படி அதற்குரிய மாத்திரைகள் சாப்பிட்டாலும் வாந்தியைக் கட்டுப்படுத்த முடியாது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? இந்த வழிமுறைகளைக் கொஞ்சம் பின்பற்றினால் போதும். அவற்றில் சில உங்களுக்காக.
மேலும் படிக்க:கர்ப்ப காலத்தில் இரத்தம் குறைவாக உள்ளதா? அதிகரிப்பதற்கான சிம்பிள் டிப்ஸ்கள்
அடிக்கடி சாப்பிடுதல்:
உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடவே முடியாது. வயிறு நிரம்ப சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது சாப்பிடும் போது வாந்தி வரக்கூடிய உணர்வைக் கட்டுப்படுத்த முடியும்.
நீர் ஆகாரங்கள்:
கர்ப்ப காலத்தில் உணவுகளைச் சாப்பிட முடியவில்லையென்றால் நீர் ஆகாரங்களைப் பருகலாம். ஒரு வேளை தண்ணீர் குடிக்க பிடிக்கவில்லையென்றால் இளநீர், பால், ஜூஸ் என அவ்வப்போது பருகுவது நல்லது.
மற்றவர்களை சமைக்க சொல்லுதல்:
கர்ப்ப காலத்தில் சமைப்பது என்பதே பெரிய விஷயம். என்ன ருசியாக சமைத்தாலும் சாப்பிட முடியாது. தாளிக்கும் வாசனைக் கூட வாந்தியை ஏற்படுத்தும். எனவே குறிப்பிட்ட மாதங்களுக்காவது அம்மாக்கள் அல்லது வீட்டில் உள்ளவர்களைச் சமைக்க சொல்லவும். கொஞ்சமாக சாப்பிட முடியும். வாந்தியும் வருவதற்கு வாய்ப்பில்லை.
மாற்று இடங்களுக்குச் செல்லுதல்:
ஒரே மாதிரியான சூழலில் இருப்பது மன சோர்வை ஏற்படுத்தும். சோம்பலாக இருப்பதோடு வாந்தி வரக்கூடிய உணர்வையும் ஏற்படுத்தும். எனவே மன நிம்மதிக்காவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது பிடித்த இடங்களுக்கு செல்ல முயற்சி செய்யுங்கள்.
மேலும் படிக்க:கர்ப்ப காலத்தில் சோர்வைக் குறைத்து புத்துணர்ச்சி பெறுவதற்கான ஊட்டச்சத்துக்கள்!
செரிமானமாகும் உணவுகள்:
உடலில் ஏற்படக்கூடிய சில ஹார்மோன் மாற்றங்களால் செரிமான பிரச்சனை உள்பட பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிடுவது நல்லது.
Image source - Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation