
Gold Price Today: தங்கத்தின் விலை நேற்று இருந்ததை விட இன்று சற்று சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக, நேற்றைய விலையை விட ரூ. 40 குறைந்துள்ளது. இதனால், இன்று தங்கம் வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர்.
தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருவது தொடர்கதையாக அரங்கேறி வருகிறது. தற்போதைய சூழலில் பொருளாதார நிலையை கருத்திற் கொண்டு தங்கத்தை ஆபரணமாக பார்ப்பதை விட, அதனை ஒரு முதலீடாகவும், சேமிப்பாகவும் மக்கள் கருதுகின்றனர். இதனால், தங்கம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, தங்கம் விலை குறையும் நாட்களில் பலரும் அதனை வாங்குவதற்கு முயற்சி செய்கின்றனர்.
ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்றைய தினம் ரூ. 13,091 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே 24 கேரட் தங்கம் நேற்றைய தினம் ரூ. 13,135 என விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில், இன்றைய தினம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 44 குறைந்துள்ளது. அதனடிப்படையில், இன்று 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,04,728 எனவும், 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,30,910 எனவும், 100 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 13,09,100 என விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: Gold Cleaning : தங்க நகைகள் அழுக்கு படிந்து கறுத்து போனாலும் வீட்டிலேயே பாலிஷ் செய்யலாம்
இதேபோல், ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 12,000 என இன்று விற்பனை ஆகிறது. நேற்றைய தினம் இதன் விலை ரூ. 12,040 என இருந்தது. இதன் மூலம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 40 குறைந்துள்ளது. அதன்படி, 8 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 96,000 எனவும், 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,20,000 எனவும், 100 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 12,00,000 எனவும் இன்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 18 கேரட் தங்கத்தின் விலை என்று ரூ. 10,000 என இன்று விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 10,040 என விற்பனை ஆனது. இதன் மூலம் இன்று, இதன் விலை ரூ. 40 குறைந்துள்ளது. அதன்படி, 8 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 80,000 எனவும், 10 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,00,000 எனவும், 100 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 10,00,000 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: தங்கம் வாங்க போறீங்களா ? இந்த ஐந்து விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
மறுபுறம், வெள்ளியின் விலை இன்று ரூ. 1 உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் ரூ. 198 என விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று ரூ. 199 என விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 8 கிராம் வெள்ளியின் விலை ரூ. 1,592 எனவும், 10 கிராம் வெள்ளியின் விலை ரூ. 1,990 எனவும், 100 கிராம் வெள்ளியின் விலை ரூ. 19,900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை இன்று ரூ. 40 என்ற அளவில் குறைந்திருப்பதால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் இன்றைய தினம் தங்கம் வாங்குவதற்கு பலர் திட்டமிட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. ஏனெனில், ஆடம்பரமான ஒரு பொருளாக தங்கத்தை காண்பதை விட தங்கத்தை தற்போது ஒரு வகையான சேமிப்பாக மக்கள் நினைக்கின்றனர். இதனால், தங்கம் விலை குறையும் போது அதனை வாங்கும் எண்ணம் மக்களிடையே அதிகரிக்கிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com