
நாம் சம்பாதித்து சேர்க்கும் பணத்தை பெரும்பாலும் பொன்னில் (தங்கத்தில்) முதலீடு செய்வோம். இல்லையேல், ஒரு நிலத்தை வாங்குவோம். இந்தியர்கள் முதலீடு செய்ய முதலில் தேர்ந்தெடுப்பது தங்கத்தை தான். தங்க திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று சொன்னால், யாருக்கு தான் ஆசை வராது! இப்போது தங்க பத்திரத் திட்டம் மூலம் டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதை தெரிந்துக்கொள்வோம்.
RBI தொடங்கியது தான் இந்த தங்க பத்திரத் திட்டம். இதில் தங்கப்பத்திரத்தின் விலை கிராமுக்கு 5147 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் அரசால் தொடங்கப்பட்டது இந்த தங்கப்பத்திரத் திட்டம் (SGB). நீங்கள் இந்த திட்டத்தின் மூலம் தங்க ஆபரணம், தங்க பிஸ்கட் அல்லது தங்க காசாக வாங்க வேண்டிய அவசியமில்லை. தங்க பத்திரத்தின் ஒவ்வொரு தவணைக்கும் ஒரு கிராமுக்கு குறிப்பிட்ட விலையை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.
நீங்கள் ஆன்லைனில் வாங்கும்போது ஒரு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இந்த தங்க பத்திரத் திட்டத்தில் நம்மால் ஆன்லைனிலும் வாங்க முடியும், ஆப்லைனிலும் வாங்க முடியும்.
இந்த பத்திரங்கள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், தபால் அலுவலகங்கள், தேசியப் பங்குச்சந்தை நிறுவனம், மும்பை பங்குச் சந்தை நிறுவனம் போன்றவற்றில் விற்கப்படுகிறது.

தங்கப் பத்திரம் குறித்து நாங்கள் அளித்த தகவல் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com