
Gold Price Today: தங்கம் விலை இன்றைய தினத்தில் மாற்றமின்றி தொடர்கிறது. இதனால், நகை வாங்க விரும்புபவர்கள் இன்று தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று மாற்றம் இன்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலை அதிகரித்து வந்தாலும் அதனை வாங்கும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை. அந்த அளவிற்கு தங்கத்தின் மீதான விருப்பமும், நாளுக்கு நாள் அதன் விலையை போன்று அதிகரித்து வருகிறது. ஏனெனில், தங்கத்தை நகையாக பார்ப்பது மட்டுமின்றி அதனை ஒரு முதலீடாகவும் மக்கள் தற்போதைய சூழலில் கருதுகின்றனர்.
இந்நிலையில், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்றைய தினம் ரூ. 96, 320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்றைய தினம் நிர்ணயம் செய்யப்பட்ட அதே விலையாகும். அந்த வகையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 12,040 என்ற அடிப்படையில் இன்று சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 198 என இன்று விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 1 லட்சத்து 98 ஆயிரம் என்று விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: Gold Cleaning : தங்க நகைகள் அழுக்கு படிந்து கறுத்து போனாலும் வீட்டிலேயே பாலிஷ் செய்யலாம்
முன்னர் இருந்த காலத்தில் தங்கம் என்பது ஆடம்பரமாகவும், அலங்கார நகைகளாகவும் கருதப்பட்டன. ஆனால், தற்போதைய சூழலில் அதனை ஒரு முதலீடாக மக்கள் கருதுகின்றனர். ரியல் எஸ்டேட் போன்று தங்கத்தை ஒரு உடமையாக கருதி அதில் முதலீடு செய்கின்றனர். பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடத்தை தங்கம் பெறுகிறது. குறிப்பாக, நடுத்தர வர்க்க குடும்பத்தில் பொருளாதார ரீதியாக ஏதேனும் பிரச்சனைகள் உருவாகும் போது, தங்கத்தை அடமானம் வைப்பதன் மூலம் அதில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர்.
அந்த அளவிற்கு சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை தங்கம் மறுக்க முடியாத ஒரு அங்கமாகி விட்டது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மேலும், தங்களது சேமிப்பை தங்கமாக மாற்றுவதற்கும் ஏராளமானவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: தங்கம் வாங்க போறீங்களா ? இந்த ஐந்து விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
தங்கத்தின் விலை ஒரே மாதிரியாக இருக்காது என்பது எல்லோரும் அறிந்தது தான். ஆனால், கடந்த சில மாதங்களாக நாள் தோறும் தங்கத்தின் விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. குறிப்பாக, தங்கம் விலை குறைந்ததை விட பல நாட்களில் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக தங்கம் வாங்குவதில் சாமானிய மக்களுக்கு சிரமம் இருந்தது. தங்கத்தின் விலையை தினசரி கண்காணித்து சற்று குறைந்தாலும், அன்றைய தினத்தில் தங்கம் வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காண்பித்தனர்.
இந்த சூழலில், நேற்று காணப்பட்ட அதே விலையில் இன்றும் தங்கம் விற்பனை செய்யப்படுவதால் இன்றைய தினம் தங்கம் வாங்குவதில் மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com