
Today Gold Price: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து விரிவாக இந்தப் பதிவில் காணலாம். இன்று இவற்றின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த பல மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. ஒரு நாள் இதன் விலை குறைவாக இருந்தால், அடுத்த நாள் அதிகரிக்கிறது. இதனால் தங்கம் வாங்க வேண்டும் என விரும்பும் சாமானிய மக்களுக்கு சிரமமாக உள்ளது. அந்த வகையில், கடந்த இரண்டு தினங்களை விட தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை இன்று அதிகரித்துள்ளது.
நேற்று 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 13,091-ஆக இருந்தது. இன்று இதன் விலை ரூ. 30 அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 13,124 என இன்று விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,04,992 எனவும், 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 1,31,240 எனவும், 100 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 13,12,400 எனவும் விற்பனை ஆகிறது.
மேலும் படிக்க: Gold Cleaning : தங்க நகைகள் அழுக்கு படிந்து கறுத்து போனாலும் வீட்டிலேயே பாலிஷ் செய்யலாம்
ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை நேற்று ரூ. 12,000 ஆக இருந்தது. இன்று இதன் விலை ரூ. 30 அதிகரித்து, ரூ. 12,030-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், 8 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 96,240 எனவும், 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,20,300 எனவும், 100 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 12,03,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்று, 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 10,000 என்ற அளவில் விற்பனை ஆனது. இன்று இதன் விலை ரூ. 30 அதிகரித்து, ஒரு கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 10,030 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 8 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 80,240 எனவும், 10 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,00,300 எனவும், 100 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 10,03,000 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: இனி வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போட கடைக்கு செல்ல வேண்டாம்; வீட்டிலேயே நகையை சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்
இன்று வெள்ளி விலையும் அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, நேற்றைய தினத்தை விட ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 8 உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 207-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டின் விலையும் அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். இது, தங்கத்தை முதலீடாக கருதும் சாமானிய மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில், இன்றைய காலகட்டத்தில் தங்க நகையை ஆடம்பர பொருளாக வாங்குவதை விட, அதனை சேமிப்பாக கருதி முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com