
தமிழகத்தில் தற்போது பருவமழையின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், வானிலையில் மீண்டும் சில மாற்றங்கள் காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்ட மழைப்பொழிவு, நாளை முதல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை பிற்பகல் முதல் மழை படிப்படியாக தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் காலநிலை மாற்றம், ஒரு பக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும், மறுபக்கம் உடல்நலம் சார்ந்த சில சவால்களையும் சந்திக்க நேரிடலாம். மாறிவரும் வானிலை மற்றும் குளிர்கால சூழலில் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி என்றும், சென்னை உள்ளிட்ட எந்த பகுதிகளில் வானிலை மாற்றம் இருக்கும் என்றும் இதில் காண்போம்.
குளிர் மற்றும் மழைக்காலம் கலந்த இந்த சூழல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி போன்ற பருவகால நோய்கள் எளிதில் வரக்கூடும். எனவே, உங்கள் உடலை தயார் நிலையில் வைத்திருக்க சில வழிமுறைகளை நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டும். அவற்றை விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: Chennai Rains: தித்வா புயலால் அதிகரிக்கும் கனமழை; உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் முக்கிய குறிப்புகள்
குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான வெப்பத்தையும், ஆற்றலையும் அளிக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். முழு தானியங்கள், மீன், கோழி இறைச்சி, பருப்பு வகைகள் மற்றும் விதைகளை உணவில் அதிகம் சேர்க்கவும். வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை போன்றவற்றை எடுத்துக் கொள்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். உணவில் இஞ்சி, பூண்டு, மிளகு மற்றும் மஞ்சள் போன்ற மூலிகை மசாலாக்களை சேர்ப்பது சளி மற்றும் இருமலுக்கு எதிராக செயல்படும். இந்த நேரத்தில் சூடான மற்றும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

இந்த காலநிலை மாற்றத்தின் போது உடற்பயிற்சிகள் மேற்கொள்வதில் பலருக்கு சிரமம் இருக்கலாம். ஆனால், உடல் சுறுசுறுப்பாக இருந்தால் தான் நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக செயல்படும். தினமும் யோகா அல்லது லேசான உடற்பயிற்சிகளை செய்வது உடலுக்கு தேவையான வெப்பத்தை அளிக்கும். இது பருவகால நோய்களான காய்ச்சல் மற்றும் சளிக்கு எதிராக போராடும் திறனை உடலுக்கு அளிக்கிறது.
குளிர்காலத்தின் போது சருமம் வறண்டு காணப்படும். குளிர்ந்த காற்று சருமத்திலுள்ள ஈரப்பதத்தை உறிந்து, வறண்ட சருமம், உதடு வெடிப்பு மற்றும் பாத வெடிப்பை உருவாக்கும். இதனை கட்டுப்படுத்த குளித்தவுடன் மறக்காமல் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும். வெளியே செல்லும் போது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. உதடு வெடிப்பை தடுக்க லிப் பாம் உபயோகிக்கலாம். இல்லையெனில், கற்றாழை ஜெல் அல்லது இயற்கையான தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க: Winter diet: குளிர்காலத்தின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்
குளிர்காலத்தில் அதிக தாகம் எடுக்காது என்பதால் பலரும் தண்ணீர் குடிப்பதை குறைத்து விடுவார்கள். ஆனால், இப்படி செய்வது தவறாகும். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும், செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை கொண்டு செல்லவும் தண்ணீர் அவசியம். தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது உடல் வெப்பநிலையை சீராக வைப்பதோடு, உடல் வறட்சியை தடுக்கும்.

நல்ல உறக்கம் என்பது ஆரோக்கியத்தின் அடிப்படை. இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. தூக்கமின்மை, மன அழுத்தத்தை உருவாக்கும் ஹார்மோனை அதிகரிக்கும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்குவது, கலோரிகளை குறைக்கவும், மனதை அமைதியாக வைத்திருக்கவும் உதவும்.
மழைக்காலத்தில் கிருமிகள் எளிதில் பரவும். எனவே, தனிப்பட்ட சுகாதாரம் மிக முக்கியம். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுவது, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிலிருந்து உங்களை பாதுகாக்கும்.
இவை அனைத்தையும் சீராக பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை குளிர்காலத்திலும் நீங்கள் சரியாக பராமரிக்கலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com