குழந்தை வளர்ப்பு என்பது மிகுந்த சவாலான விஷயம். அதனை திறம்பட செய்வதில் இன்றைய பெற்றோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அதனடிப்படையில் நமது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களை சரியான முறையில் வளர்க்கவும் சில சூழல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்று தற்போது பார்க்கலாம்.
மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு கடினமாக இருக்கிறதா? பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய 5 அடிப்படை அம்சங்கள்
எந்த ஒரு நிலையிலும் குழந்தைகளின் பாதுகாப்பை முதன்மையாக கருத வேண்டும். இதற்காக சில சூழல்களில் அவர்களிடம் முடியாது அல்லது கூடாது என்று கூற பழக வேண்டும். உதாரணத்திற்கு, உயரமான இடங்களில் ஏறுதல் அல்லது சாலைகளில் ஓடுதல் போன்றவற்றுக்கு உங்கள் குழந்தைகள் அனுமதி கேட்டால், அவ்வாறு செய்யக் கூடாது என்று எடுத்துக் கூறுங்கள்.
இன்றைய குழந்தைகள் அதிகமாக ஜங்க் ஃபுட் என்று சொல்லக் கூடிய சுகாதாரமற்ற உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். இந்த விஷயத்தில் பெற்றோர்கள் கண்டிப்போடு செயல்பட்டு அவர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், இரவு நேரத்தில் குழந்தைகளை அதிக நேரம் விழித்திருக்க அனுமதிக்கக் கூடாது.
ஒவ்வொரு குழந்தையும் வயதில் பெரியவர்களுக்கு மரியாதை அளிப்பதை பெற்றோர்கள் அனைவரும் உறுதி செய்ய வேண்டும். பணிவுடன் நடந்து கொள்வது, இரக்கு குணம் கொண்டிருப்பது ஆகியவற்றை குழந்தைகளுக்கு இயல்பிலேயே கற்றுக் கொடுப்பது அவசியம் ஆகும்.
மேலும் படிக்க: குழந்தைப் பருவம் முதல் மெனோபாஸ் காலம் வரை; பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கிய தடுப்பூசிகளின் பட்டியல்
குழந்தைகளுக்கு தேவை இல்லாத விளையாட்டு பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் மட்டுமே கொடுப்பதன் மூலம் நிதி மேலாண்மையின் அவசியத்தை சிறு வயதிலேயே கற்பிக்க முடியும்.
வீட்டுப் பாடம் செய்தல் போன்ற எளிமையான பொறுப்புகளையும் கூட சரியான நேரத்தில் செய்து முடிக்கும் வழக்கத்தை பின்பற்ற கற்றுக் கொடுக்கவும். இதுவே, அவர்களது எதிர்காலத்தை சீராக அமைக்க பெரிதும் உதவும். இதன் மூலம் பொறுப்புகளில் இருந்து விடுபட கூடாது என்ற மனநிலை குழந்தைகளுக்கு ஏற்படும்.
இத்தகைய விஷயங்களை அனைத்து குழந்தைகளுக்கும் சரியாக கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும். இதனை சரியாக செய்வதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பயம் கொள்ள தேவையில்லை.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com